விஷாலுக்கு சால்வை? வேலை இழந்த பெண் நிருபர்!

‘ஐயோ பாவம்’ என்பதை தவிர வேறு சொல் இல்லை இந்த சம்பவத்தை கேட்டால்! ஒரு நிருபருக்கு தனிப்பட்ட கருத்து இருக்காதா? என்கிற பெரும் கேள்வியை எழுப்பியிருக்கிறது ஒரு டிஸ்மிஸ்! பிரபல தொலைக்காட்சி ஒன்றில் சினிமா நிருபராக இருப்பவர் ஆனந்தி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நடிகர் சங்கத் தேர்தலில் நாடே அக்கறை கொண்டு ஒரு வழியாக அதை நடத்தியும் முடித்துவிட்டது.

ஒரு நாட்டின் முதலமைச்சரே இடைத்தேர்தலில் போட்டியிட்டால் எப்படியிருக்குமோ, அப்படியிருந்தது இந்த தேர்தல் பற்றி ஊடகங்களில் வந்த செய்திகளும் அக்கறை காட்டிய விதமும். அப்படிதான் இந்த தேர்தலில் இரு தரப்பு செய்திகளையும் பாரபட்சமில்லாமல் பரபரப்பாக வழங்கினார் அந்த பெண் நிருபர். தேர்தலுக்கு பிறகு ஒரு நாள் விஷால் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நாளில் ஆனந்தி லீவு. இருந்தாலும், தனிப்பட்ட ஆனந்தியாக அந்த பிரஸ்மீட்டுக்கு சென்றுவிட்டார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு பின், விஷாலுக்கு ஒரு சால்வையும் அணிவித்துவிட்டார்.

மறுநாள் ஆபிசுக்கு போனால், “நீங்க டிஸ்மிஸ்” என்றார்களாம். நடுவில் யாரோ ஒரு தீய சக்தி, ஆனந்தி அந்த மேடையில் விஷாலுக்கு அருகே நிற்கும் புகைப்படத்தை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அனுப்பி ‘போட்டு’க் கொடுத்திருக்கிறது. அதன் காரணமாகதான் இந்த டிஸ்மிஸ்.

ஒரு நிருபர் அலுவலக நேரத்தில் செய்யும் எந்த செயலுக்கும் பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால் விடுமுறையில் இருக்கும் போது அவர் எங்கு போனால் நிர்வாகத்திற்கு என்ன? அப்படி அவர் என்ன பொல்லாத சட்டம் ஒழுங்குக்கு புறம்பான செயலை செய்துவிட்டார்? நாடே போற்றி வருகிற ஒரு தொலைக்காட்சியே இத்தகைய இழிவான நிலையை மேற்கொண்டால், எங்கு போய் முட்டிக் கொள்வது?

இந்த நேரத்தில் இன்னொரு ஆரோக்கியமான விஷயமும் இன்று நடந்திருக்கிறது. தொழிலில் தினத்தந்தி நாளிதழுக்கு நேரடி போட்டியாக விளங்கும் தினமலர் நிர்வாகம், அதே தினத்தந்தி நிர்வாகத்திலிருந்து வெளிவரும் ஒரு ஆங்கில நாளிதழுக்கு முதல் பக்கத்தில் விளம்பரம் கொடுத்து தன் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. இத்தகையை ஒரு அற்புதமான அணுகுமுறையைதான் நிருபர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு ஆனந்தியோடு போகட்டும் உங்களின் குறுகிய புத்தி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
நமீதா வரணுமா? முதலில் செய்ய வேண்டியது இதுதான்!

எண்ணி இருபது நாள்தான் இருக்கும்! அன்றிலிருந்தே ஒரு புது முடிவுக்கு வந்திருக்கிறார் நமீதா. ஹன்ட்ரட் கேஜி காம்பவுண்ட் சுவராக இருந்த நமீதா, அண்மைக்காலமாக சிக்ஸ்ட்டி கேஜி தாஜ்மஹால்...

Close