பரதனுக்கு மீண்டும் வாய்ப்பு தந்தது எப்படி? அங்கதான் நிக்குறாரு விஜய்!

விஜய்யின் 60 வது படத்தை இயக்கவிருப்பது யார்? இந்த கேள்வியும் அதற்கான விடையும்தான் இன்றைய டாப் நியூஸ்! அழகிய தமிழ் மகன் பட இயக்குனர் பரதன்தான் இந்த படத்தை இயக்கப் போகிறார். இதை அவரே உறுதிபடுத்தியும் இருக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டராக பிரவிண் முடிவு செய்யப்பட்டிருக்கிறாராம். மிச்ச சொச்ச விபரங்கள் மெல்ல மெல்ல கசியும். அது போகட்டும்… இந்த செய்தி பரவிய அடுத்த வினாடியிலிருந்தே, ஒரு தோல்விப்படம் இயக்கிய பரதனுடன் மீண்டும் கூட்டணியா? என்று சமூக வலை தளங்களில் கலாய்க்க ஆரம்பித்துவிட்டார்கள் பலர். அவர்களுக்கெங்கே தெரியப் போகிறது விஜய்யின் நல்ல மனசு?

அழகிய தமிழ் மகன் படத்தை கமிட் பண்ணுவதற்கு முன் பரதன் விஜய்க்கு சொல்ல வந்ததே வேறொரு கதையைதான். ஆனால் தான் கேட்டு வைத்திருந்த வேறொரு கதையை கை காட்டிய விஜய், அதை இயக்கும்படி கேட்க எவ்வித மறுப்பும் சொல்லாமல் ‘யெஸ்’ சொன்னவர் பரதன். அதுமட்டுமல்ல, இந்த கதையை அவ்வளவு சந்தோஷமாக இயக்கியதுடன், சொன்ன நாட்களுக்குள் படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்தாராம். படப்பிடிப்பில் அவ்வளவு கம்பர்டபுளாகவும் நடந்து கொண்டாராம். ஒருவேளை பரதனின் கதையை படமாக்கியிருந்தால், அந்த படம் பெரிய வெற்றியாக கூட அமைந்திருக்கும். அதற்கப்புறம் கூட, “என் கதையை படமாக்கியிருந்தா…?” என்று தன் கவலையை கூட அவர் விஜய்யிடம் காட்டிக் கொண்டதில்லை என்பதுதான் விஜய் மனசில் பரதனுக்கு ஒரு நீங்காத இடத்தை வைத்திருந்தது.

இந்த முறை பரதன் ஆசைப்பட்டபடியே அவரே எழுதிய கதையைதான் படமாக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய்.

வென்றவர்களின் பின்னால் போய் வெற்றியை தேடுவதை விட, இன்னொரு வாய்ப்பு கொடுப்போமே என்று எண்ணுவது எவ்வளவு பெரிய மனசு? அதற்காகவே விஜய்யை பாராட்டிவிட வேண்டியதுதான்!

3 Comments
  1. anbu says

    இது குழந்தைய கிள்ளி விட்டுட்டு அப்புறம் அவரே தொட்டிலே ஆட்டி விட்ட கதையாருக்கே………..

  2. shakthi.k says

    super matter,thalapathi yallaraium valavachuthan palakam…

  3. Sriraman says

    தளபதி வாழ்க

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சேச்சே… இவரெல்லாம் ஒரு நடிகையா?

இந்த விஷயத்தை ஸ்ரீதிவ்யா மட்டும் கேட்டிருந்தால், செத்துப்போன ஆயாவையெல்லாம் கூட அழைத்து வந்து சண்டையில் இறங்கியிருப்பார். பட்... நம்ம வாயாலதான் அவர் கேட்கணும்னு இருக்கோ என்னவோ? ஈட்டி...

Close