கணவர் போரடிக்கிறார்… அமலா பால் அலுப்பு

ஏ.எல்.விஜய் இயக்கும் ‘இது என்ன மாயம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. மீனா, சுஹாசினி மணிரத்னம், நெற்றிக்கண் மேனகா என்று என்று அந்த கால ஹீரோயின்களுடன், தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, வேந்தர் மூவிஸ் சிவா, பிரபு, கே.எஸ்.ரவிகுமார், டைரக்டர் விக்ரமன், கவுதம்மேனன், பிரபுசாலமன், யுடிவி தனஞ்செயன், மனோபாலா, என்று பெரும் கூட்டம் திரண்டிருந்தது. அதற்கு காரணம் இந்த படத்தை தயாரித்திருப்பது ராதிகா சரத்குமார் தம்பதிகளின் ராடன் டி.வி.

விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அந்த கால ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இங்கும் ஒரு பாச காவியம்தான் அரங்கேறியது. ‘நான் கேரளாவில் சின்ன வயசுல படங்களில் நடிச்சுருக்கேன். அப்போ என்னை ஏதாவது விழாக்களுக்கு அழைச்சிட்டு போவாங்க. போறதுக்கு கார் இருக்காது. ஆட்டோவில்தான் போவோம். எனக்கு ஏதோ ஒரு பங்ஷனுக்கு போன உணர்வுதான் இருக்கும். ஆனால் எங்க அப்பா அம்மா கண்கலங்கி பார்த்துட்டு இருப்பாங்க.

இன்னைக்கு என் மகள் நடிக்க வந்த பிறகுதான் என் அப்பா அம்மாவோட மனநிலை அன்று எப்படி இருந்திருக்கும்னு என்னால உணர முடியுது. என் மகள் கீர்த்தி சுரேஷ்னு சொல்றதுக்கு பதிலா, கீர்த்தி சுரேஷ் அம்மாதான் மேனகான்னு சொல்ற நாளுக்காகதான் நான் காத்திருக்கேன் என்றார் அந்த பாசக்கார அம்மா. விழாவில் பேசிய அமலாபால், தன் கணவரை பற்றி பேசியதுதான் ஹைலைட்.

‘நாங்க எங்காவது வெளிநாட்டுக்கு போனால் கூட, கதை சொல்லியே போரடிப்பாரு அவர். ஆனால் அதையெல்லாம் படத்துல காட்சிகளா பார்க்கும் போது வியப்பா இருக்கு என்றார். ஆக நமக்கு புரிந்தது ஒன்றுதான். மனைவியிடம் கதை சொல்லி அனுமதி வாங்கிவிட்டுதான் படமே எடுக்கிறார் ஏ.எல்.விஜய்.

Read previous post:
ஜோதிகா என்னோட மகள் சிவகுமார் உருக்கம்!

மொழி திரைப்படம் வந்து சரியாக ஏழு வருஷங்கள் ஆகிவிட்டது. அந்த படத்தின் சிறப்பு காட்சியில் பேசிய எல்லாரும் ‘அதுக்குள்ள ஜோதிகா நடிப்புக்கு முழுக்கு போட்டே ஆகணுமா? சூர்யா...

Close