விஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா? விஜய்யும் அடித்தார் பல்டி!

கடைசி நேரத்தில் விஜய்யும் காலை வாரி விடுவார் என்று அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது. “இந்த ஸ்டார் கிரிக்கெட் நிகழ்ச்சியில் நீங்க கட்டாயம் கலந்துக்கணும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டதாம் விஜய்க்கு.

இந்த வாரம்தான் தெறி திரைக்கு வந்திருக்கிறது. படம் தொடர்பான தொலைக்காட்சி பிரமோஷன்களுக்கும் சரி, படம் வெளியாவதற்கு முன் நடந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கும் சரி. விஜய் வரவேயில்லை. நிலைமை இப்படியிருந்தாலும், பேசியவர்களின் லைனுக்கு வந்த விஜய், “முயற்சி பண்ணுறேன்” என்று கூறினாராம். ஆனால் நிகழ்ச்சி முடியும் நிமிஷம் வரைக்கும் ஜோசப் குருவில்லா அந்த திசைக்கே வரவில்லா!

அவர் ஏன் வரவில்லை என்று விசாரித்தால், அலேக்காக தூக்கிப் போடுகிறது. “நான் ஏன் வரணும்? விஷால் பேர் வாங்கிட்டு போறதுக்கு நாங்க எங்க டைமை செலவு பண்ணணுமா?” என்று அவர் கூறியதாக தெரிகிறது. விஜய் அஜீத் மாதிரியான பெரிய நட்சத்திரங்கள் இப்படி நினைப்பது சற்று ஷாக்காகவே இருக்கிறது. நடிகர் சங்க கடனை அடைத்து விஜயகாந்த் பெயர் வாங்கிக் கொள்வார் என்று தெரிந்தேதான் நட்சத்திர கலைவிழாவுக்கு மனசார பறந்து வந்தார்கள் ரஜினியும் கமலும். அப்போது மட்டுமல்ல, இப்போதும் அந்த பெரிய ஜாம்பவான்களுக்கு இருக்கிற பெருந்தன்மை இந்த குட்டி ஜாம்பவான்களுக்கு இல்லையே என்று கவலைப்படுகிறது நடிகர் சங்க பொறுப்பாளர் வட்டாரம்.

வில்லை வளைச்சுடலாம். விறகை வளைக்க முடியுமோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே? நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்!

சாதி மதம் எல்லாவற்றையும் கடந்ததுதான் சினிமா என்பார்கள். ஆனால் இங்கு குழிபறிக்கவென்றே மம்பட்டியும் கையுமாக திரியும் சில ஹீரோக்களால், சாதி மத பாலிட்டிக்ஸ் கூட பரவாயில்லை என்றாகிவிடும்...

Close