வேதாளம் ஸ்பெஷல் -2 சிவா… இத்தனை வருஷ தப்புக்கு ஒரு பரிகாரம் வேணும்! அஜீத் ஆசையை வேதாளத்தில் நிறைவேற்றிய சிவா?

ஒரு வீட்டில் ஒரு ஆண் குழந்தை படித்தால், அந்த குடும்பம் தழைக்கும்! ஒரு வீட்டில் ஒரு பெண் குழந்தை படித்தால் அந்த தலைமுறையே தழைக்கும்! இது ஒன்றும் ஒப்புக்கு சொல்லப்படுகிற வார்த்தையல்ல. உண்மை!

தமிழ்சினிமா பெண்களை எந்ந இடத்தில் வைத்துப் பார்க்கிறது? ஒரு நிமிஷ நேரம் கண்ணை மூடி யோசித்தாரோ என்னவோ? டைரடக்டர் சிவாவிடம் மனம் விட்டு பேசினாராம் அஜீத். “நானும் சரி, சக ஹீரோக்களும் சரி. பெண்கள் பின்னே சென்று ஈவ் டீசிங் பண்ணுவது மாதிரியெல்லாம் நிறைய நடிச்சுருக்கோம். இப்ப நினைச்சு பார்த்தால் சங்கடமா இருக்கு. பெண்களை படிக்க விடணும். ஆனால் அவங்களை சுதந்திரமா விடறதில்ல. லவ், ஈவ் டீசிங்னு நிறையவே நோகடிச்சுட்டோம். அதுக்கெல்லாம் பரிகாரம் பண்ணுற மாதிரி நம்ம படத்துல ஒரு சீன் இருக்கணும் சிவா” என்றாராம் அஜீத்.

அதற்கப்புறம் படத்தில் மிக முக்கியமான ஒரு கேரக்டரையே உருவாக்கியிருக்கிறார் சிவா. வேதாளம் படம் பெண்களின் பெருமையை சொல்கிற படமாக இருக்கும் என்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வருகிற அத்தனை பேரும், பெண்களை தன் சகோதரியாக, தாயாக, மனுஷியாக பார்ப்பது நிச்சயமாம்!

அதுக்காகவே அஜீத்துக்கு ஒரு பொக்கே!

Read previous post:
கவுதம்மேனன் மீது ஒரு கண்?

கவுதம்மேனன் மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆனால் அதை சம்பந்தப்பட்ட கவுதமிடம் கூறாமல், தன்னை நாடி வரும் பெரிய பெரிய தயாரிப்பாளர்களிடம் கூறுகிறாராம். அவர் காம்பினேஷன்...

Close