நானும் மாட்டுக்கறி தின்றவன்தான்! தூங்காவனத்தை ஓடவைக்க கமல் ட்ரிக்?!
“மனுசன கூட அடிச்சுத் தின்னு. ஆனா மாட்டுக்கறிய தொட்ட? மவனே… நாஸ்திதான்” என்று கறி விவகாரத்தை குறி வைத்து அரசியல் நடந்து கொண்டிருக்கிறது இந்தியாவில். நான் தேவைப்பட்டால் மாட்டுக்கறி தின்பேன். அதை யாராலும் கேட்க முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பேச, பெங்களூர் பி.ஜே.பி பிரமுகர் ஒருவர் “அவர் தலையை வெட்டுவேன்” என்று பொதுக்கூட்டத்தில் பேசி, கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் இப்போது. இப்படி நாடெங்கிலும் வாயில்லா ஜீவனை வைத்து வாய் வலிக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்று கமலும் அந்த டாபிக்கை தொட்டதுதான் பலத்த ஷாக்! “நீ இன்னதைதான் சாப்பிடணும்னு சொல்வதற்கோ, இன்னதை சாப்பிடக் கூடாதுன்னு சொல்றதுக்கோ யாருக்கும் உரிமையில்லை. நான் கூட மாட்டுக்கறி தின்றவன்தான்” என்று அவர் பேசியதை, இனிவரும் அரசியல் உலகம் எந்த மாதிரியான கலகத்தில் கொண்டு போய் நிறுத்தப் போகிறதோ தெரியாது. ஆனால் கமல்ஹாசனின் பிறந்த தினமான இன்றைய தினம், சத்தியமாக சர்ச்சைக்குரிய தினமாக அமைந்துவிட்டது அந்த பேச்சால்.
அதுமட்டுமல்ல, தன்னை சிலர் அரசியலுக்கு இழுப்பதாகவும் குற்றம் கூறியிருக்கிறார் கமல். அவர் பேசும்போது- என்னை அரசியலுக்கு இழுப்பது யார் என்று தெரியும். கமலஹாசன் என்ற பேருந்தில் ஏறினால் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். என்னுடன் இருப்பவர்கள் அரசியல் சம்பந்தப்பட்டவர்கள் அல்ல. அரசியல் பற்றி புரியாதவர்களும் அல்ல. அரசியல் புரிந்ததால்தான் விலகி நிற்கிறோம். பகுத்தறிவு என்பது அரசியலால் எமக்கு கிடைக்கவில்லை என்றார் சூடாக.
கமலின் இத்தகைய பேச்சுகளால் இன்னும் சில தினங்களில் சர்ச்சை ஏற்பட்டு அவர் படம் ஓடும் தூங்காவனம் தியேட்டர்கள் முற்றுகையிடப்பட்டு அதனால் அப்படம் பம்பர் ஹிட் அடித்தால், கண்டிப்பாக இது விஸ்வரூபம் ஃபார்முலாவன்றி வேறில்லை என்று முன் கூட்டியே கணிக்கிறது கோடம்பாக்கம்!
இப்பல்லாம் அரசியலுக்கு வெளியே இருக்கிறவங்கதான் அதிகமா அரசியல் பண்றாங்க!
ஒண்ணும் புரியல, சரி தூய்மை இந்தியா திட்டத்தில் இதுவரை என்ன செய்துள்ளீர்கள் என்றும் அந்த 16 கோடி தர்மம் பண்ணியதாக செய்தி வந்ததே அதை பற்றியும் சற்று விளக்கமாக சொன்னால் நல்லது, உங்களை நம்புவதற்கு!
முரண்பாடுகளின் மொத்த உருவம். நடிப்பதுடன் நிறுத்தி கொண்டால் நல்லது. வர வர உளறல் பேச்சு அதிகமாகி விட்டது. சரியான உளறல் பேச்சு. என்ன சொல்ல வருகிறார் என்று இறுதி வரை புரியவில்லை.