சென்டர்ல பிஜேபி தான்! ரஜினி சொல்லாமல் சொல்லும் புதுக்கணக்கு!

அவரவர் நாக்கை அவரவர்களே பிடுங்கிக் கொள்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது அரசியல்வாதிகளின் கூட்டணி. ‘ஏன்யா… கொஞ்சமாவது வெட்கம் வேணாமா? நேத்து வரைக்கும் ஒருத்தர் எலும்பை இன்னொருத்தர் கடிச்சு துப்பிட்டு இன்னைக்கு என்னய்யா போஸ் வேண்டிக் கிடக்கு போஸ்?’ என்று வீட்டுக்கு வீடு வெந்து தணிகிற இந்த நேரத்தில், ‘தன் கடன் படம் செய்து கிடப்பதே’ என்று அடுத்தப்படத்தின் கதையை டிக் அடித்துவிட்டார் ரஜினி.

புதுக்கட்சியும் போட்டியும் சட்டமன்ற தேர்தலுக்குதான் என்று சொன்ன ரஜினி, புது தகவலாக நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத்திடம் கதை கேட்டு கால்ஷீட் கொடுக்கிற முடிவுக்கும் வந்திருக்கிறாராம். இவ்வளவு கான்பிடன்ட்டாக அடுத்தடுத்த படங்களை கமிட் பண்ணும்போதே தெரிந்துவிட்டது… ரஜினியின் எண்ணமும் நம்பிக்கையும். இன்னும் ஐந்து வருடங்களுக்கு மோடி பிரதமர் என்றால், மிச்சமிருக்கிற வருஷத்தை முக்காமல் முனகாமல் கடந்துவிடுவார் எடப்பாடி. மத்தியில் ஆட்சி மாறினால்தான் தமிழகத்தில் காட்சி மாறும்.

ஒருவேளை அப்படி நடந்தால் இன்னும் ஆறு மாதம் கூட இந்த ஆட்சி தாங்காது. அப்படியிருக்க புது புது படங்களாக கமிட் பண்ணும் ரஜினி, படத்தில் நடிப்பாரா? கட்சியை ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வாரா?

அடுத்தடுத்து படங்களை கமிட் பண்ணுவதை பார்த்தால், மோடி வருவார் என்கிற ரஜினியின் நம்பிக்கையே தலை தூக்கி நிற்கிறது.

ஒருவேளை எதிர்கட்சிகளின் நெத்தியில வைக்கலாம்னு நினைச்சிருக்கிற ஒத்த ரூவாய ஓட்டு மிசினுக்குள்ள வச்சுருக்காய்ங்களோ என்னவோ?

2 Comments
  1. நூர்ஜஹான் says

    இப்போ தலைவர் ரஜினி கட்சியெல்லாம் ஆரம்பிக்க மாட்டாருடான்னு சொல்லுறவனெல்லாம், தலைவர் ரஜினி கட்சி ஆரம்பிச்சவுடனே, இத ஆரம்பிக்க இவ்வளவு வருஷம் ஆகி இருக்குன்னு பேச்சை மாத்துவானுங்க , வெக்கங்கெட்டவனுங்க …
    தலைவர் ரஜினி இந்த தேர்தலில், போட்டியிடததும், ராஜதந்திரமே..
    அரசியலில் எம்ஜிஆர் அடைந்த வெற்றியைவிட பலமாக இருக்க போகிறது, தலைவர் ரஜினியின் அரசியல்…
    தலைவரை விட நேர்மையான, கண்ணிமான, அரசியல் நாகரீகத்துடன் நடக்கக்கூடிய தலைவர் தமிழகத்தில் வேறு யாரேனும் உண்டா? நீங்கள் எவ்வளவு சமூக வலைத்தளத்தில் வசைபாடினாலும் கண்ணியத்துடன் பதில் தரக்கூடியவர், நேர்மையாளர்.

  2. S Venkatesan says

    ரஜினி அவரது முடிவை தீர்க்கமாக அறிவிக்கிறார். முன்னுக்கு பின் பேசுவதே இல்லை. பத்திரிகைக்கார்கள் அவர்கள் பரபரப்புக்கு என்று ஏதாவது எழுதி விட்டு, ரஜினி பின் வாங்கிட்டார் என எழுதுவதை வாடிக்கையாக வைத்து இருக்கின்றனர்.

    1 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள் சேர்த்தும் கூட பெருசாக அலட்டி கொள்ளாமல் சட்டசபை பொது தேர்தல்தான் இலக்கு என்று சொல்லி விட்டாரே?

Reply To S Venkatesan
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
ஜுலை காற்றில் / விமர்சனம்

Close