உடல் நலம் தேறினார் இளையராஜா! இன்றே டிஸ்சார்ஜ்?
கடந்த வெள்ளியன்று தனக்கான புதிய இணையதளத்தை தொடங்கினார் இளையராஜா. அன்றிரவே அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போய்விட்டது. அவசரம் அவசரமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவர். அவருக்கு திடீர் நெஞ்சு வலி என்றும் ஆஞ்ஜியோ செய்யப்படுவதாகவும் தகவல் பரவின. நல்லவேளையாக வேறொரு தகவல் இன்று காலை வெளிவந்து அவரது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதயத்தில் எவ்வித பிரச்சனையுமில்ல. காஸ்ட்ரோ பிரச்சனைதான். இதற்காக குடல் மற்றும் இரப்பை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாம். வெகு விரைவாக குணமாகி வரும் அவர் இன்றே டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் கூறுகிறார்கள்.
பூரண நலத்துடன் வீடு திரும்ப பிரார்த்திக்கிறது பல்லாயிரக்கணக்கானோரின் மனசு!
மகான் நீடூடி வாழ ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்…