வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?
‘ஆனந்த கும்மி’ என்ற படத்தை தயாரித்தவர் இசைஞானி இளையராஜா. அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர் தமிழில் ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறார். மகன் யுவனுக்கும் அந்த ஆசை இருக்கிறது. இப்படி படத் தயாரிப்பு விஷயத்தில் இன்னும் பசுமையாகவே இருக்கிறது அவரது பேமிலி. இந்த நேரத்தில் தானே ஒரு படத்தை தயாரித்தால் என்ன என்று வெகு காலத்திற்கு பின் ஆசைப்படுகிறாராம் ராஜா. பொறுப்பை சிரமேற்கொண்டு செய்து கொடுக்கதான் அவரை சுற்றி பாலா போன்ற அனுபவ இயக்குனர் கம் தயாரிப்பாளர் இருக்கிறாரே… ஆனால் இந்த முறை படம் எடுத்தால், அது முன்னணி ஹீரோக்களை வைத்துதான் என்பதில் தெளிவாக இருக்கிறாராம் இளையராஜா.
ஏனென்றால் வியாபாரம், கை கடிக்காத விநியோகம் எல்லாவற்றுக்கும் தோதானது பெரிய ஹீரோக்களின் படங்கள்தான். ராஜா கேட்டால் முடியாது என்று யாரும் சொல்லப் போவதில்லை என்றாலும், டாப் ஃபைவ் ஹீரோக்கள் ரெண்டு வருஷம் மூணு வருஷம் கழிச்சு என்பார்களே? இசைஞானியின் பார்வை இப்போது ஆர்யா, விஷால் ரேஞ்சுக்கு இருக்கிறதாம்.
வரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா?