கொழும்பில் இளையராஜா கச்சேரி! ரஜினியை தடுத்தவர்களே… எங்கப்பா இருக்கீங்க?

குழியில் விழுந்தவனை இன்னும் குப்புறத் தள்ளுவேன் என்பது போலவே செயல்படும் சில அரசியல்வாதிகள், “எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டான். அவன் ரசித்த கலைஞர்களை நேரில் பார்த்தாவது கொஞ்சம் நிம்மதியா இருக்கட்டுமே?” என்று விடுகிறார்களா? “நோ… போகாதே… போனா நடக்கறதே வேற…” என்று மூக்கு விடைக்க பேசி, முடிந்தவரைக்கும் ஈழத் தமிழர்களை இம்சைக்குள்ளாக்கி வருகிறார்கள்.

அந்த வகையில் ரஜினியை காண ஆவலாக இருந்த ஈழத் தமிழர்கள் பலர், ரஜினியின் பயணத் திட்டம் ரத்தானதும், குய்யோ முய்யோ என்று கூடி கூடி இந்த வாய்பேச்சு தலைவர்களை வசைபாடித் தீர்த்தததை உலகம் அறியும். ரஜினியாவது எதுக்குடா வம்பு என்று பின் வாங்கிவிட்டார். ஆனால் இளையராஜா பின் வாங்கக் கூடியவரா? ரொம்ப அழுத்தமான ஆளாச்சே? எப்படிடா அவரது பயணத்தை தடுப்பது என்று இப்பவே கணக்கு போட ஆரம்பித்துவிட்டது வாய் கோஷ்டி.

வரப்போகும் பிரச்சனை இதுதான். வரும் ஜுன் மாதம் இசைஞானி இளையராஜாவின் மேடைக் கச்சேரி கொழும்புவில் நடக்கப் போகிறது. இதற்கான ஏற்பாட்டை ராஜபக்சேவின் உறவினர்கள் சிலர் செய்து வருகிறார்களாம். பயண ஏற்பாடுகள் படு வேகமாக நடந்து வருகின்றன. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட நிமிஷத்திலிருந்தே, இதை தடுத்தாவணுமே? என்று மண்டைகாய ஆரம்பித்துவிட்டது தமிழகத்தின் சில கட்சிகள்.

இளையராஜாவை தடுக்கிற தைரியம் மற்றவர்களுக்கு இருக்கலாம். ஆனால் அதை தாண்டிப் போகிற தைரியம் அவருக்கே உரியது. என்ன நடக்கப் போகிறதோ… பார்க்கலாம்!

https://www.youtube.com/watch?v=T6IFIvJyv6U&feature=youtu.be

2 Comments
  1. Balaji says

    Sir unga uvamayaiyai konjam kammi pannunga. Konjam adhigama use panra madhiri theriyudhu. Sorry its my opinion..

  2. Karthik says

    என் கருத்தும் அதே தா ப்ரோ

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கமல்ஹாசனுக்கு இன்னும் ஒரு ஆபரேஷன்? நடுவில் சில திட்டங்கள்! அதென்ன?

Close