ஓவியத்தில் இளையராஜா! துவங்கி வைத்தார் விஜய் சேதுபதி
இந்தியாவிலேயே முதன் முறையாக 1000 படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இனைந்து வரையும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் , நாசர் , பொன்வண்ணன் , இயக்குநர் பா.ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவை நடிகர் விஜய் சேதுபதி வர்ணத்தை எடுத்து கொடுத்து சிறப்பித்து வைத்தார்.
லயோலா கல்லூரியில் வைத்து இவ்விழா நடைபெற்றது .விழாவின் தனி சிறப்பு யாதெனில் இசைஞானி இளையராஜா அவர்களின் இசைக்கு ஏற்றவாறு ஓவியர்கள் அனைவரும் ஓவியம் வரைந்தது தான். இயக்குநர் பா.ரஞ்சித் அவருடைய மனைவி மற்றும் மகள் ஆகியோர் கலந்து கொண்டு ஓவியம் வரைந்தது தனி சிறப்பு. இவ்விழா நாளையும் தொடரும். இந்நிகழ்வின் தொடர்ச்சியாக இந்த ஓவியங்கள் அனைத்தும் விரைவில் பார்வைக்கு வைக்கப்படவுள்ளது. இதற்க்கு அடுத்தகட்டமாக இந்த 1௦௦ ஓவியங்கள் அனைத்தும் புத்தகங்களாக வெளியிடப்படவுள்ளது.