அடுத்த கட்டத்தை நோக்கி சினிமா! யு ட்யூபை நாடும் அரவிந்த் ஸ்ரீனிவாசன்!

பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல் OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும் நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.

இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்ச்சி குறித்து கூறுகையில் “YouTube இனையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்க்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் YouTube இனையதளத்தின் பங்கு அபாரமானது.

இது வரை எத்தனையோ படங்களும் YouTube இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இது வரை YouTube வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது YouTube வெளியீட்டிற்க்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது. அவர்களும் இது ஒரு நல்ல முயற்ச்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாக நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம்.

இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக YouTube இனையதளத்தில் வெளியானாலும் இதர OTT எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்ச்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிடவிருக்க்கிறோம்.” என தெரிவித்துள்ளார்.

———————————————————-

In a first, feature film to be exclusively produced & released on YouTube!

Indian Cinema, which originated with silent films, has been continuously evolving with each passing phase. During the last few years, films have begun releasing not just in theatres but also on OTT platforms.

Looking to take this evolution to the next level, NextGen, an enterprising firm, is now attempting, for the first time ever in India, to make a film exclusively for the YouTube platform.

The firm is looking to make this film through crowdfunding simultaneously in four languages namely Tamil, Telugu, Malayalam and Hindi.

Speaking about this effort, Aravindh Srinivasan of NextGen says, “Today, the YouTube platform has an important role to play in ensuring the success of a film. By presenting the teasers, trailers and songs through YouTube, filmmakers manage to get viewers and fans interested in their films and thereby raise expectation levels. Therefore, YouTube’s contribution in this regard is humungous.

“Several films have been released directly on YouTube. However, all of these films have done so either because of a problematic theaterical release or Censor issues. However, until now, no Indian film has been made with the sole intention of releasing it exclusively on YouTube. When I discussed this issue with my friends, the thought ‘Why not make a film exclusively for the YouTube platform?’ arose in me. My friends found this to be a good idea and promised to join in as producers for the venture. Following the support provided by friends, we began actively searching for a good script that could be made into an entertaining film. After an extensive search, we have now finalised the script.

“We intend to make this film simultaneously in four languages — Tamil, Telugu, Malayalam and Hindi. Although this film will first release on YouTube, we intend to make an attempt to release it on other OTT platforms and through TV channels also. Our prime focus is to ensure that this film, which is to be presented free of cost to viewers, is of international standards. We will shortly announce the cast and crew of this film.”

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிம்புவை ஏன்யா உசுப்பி விடுறீங்க?

Close