டைரக்டர் பாலா அலுவலகத்தில் வருமான வரி சோதனை! ஐயய்யோ… அப்புறம் என்னாச்சு?

எப்போதெல்லாம் முக்கியமான படங்கள் வெளிவருகிறதோ, அப்போதெல்லாம் வருமான வரித்துறையினர் கொக்கி வைத்து பிடிக்கிற வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு. அதுவும் பொங்கல் தீபாவளி போன்ற சமயங்களில், உள்ளே இறங்கி பட்டாசையும் கரும்பையும் விட்டுவிட்டு மற்றதையெல்லாம் கலைத்து அள்ளிப் போட்டுவிட்டு அவர்கள் கிளம்புகிற வேகத்தை, கர்சீப் நனைந்த கண்களோடு கவனித்து வருகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

சமீபத்தில் நடந்த பெரிய ரெய்டு புலி ரிலீஸ் சமயத்தில்தான். கட்டுகட்டாக பணமும் போச்சு. டாகுமென்ட்டுகளும் போச்சு. எப்படியோ? படம் பலத்த சேதாரத்தோடு வெளிவந்தது. இப்போது பொங்கல் ரிலீசுக்கு ‘தாரை தப்பட்டை’ தயாராகி வருகிறது. இந்த நேரத்தில்தான் பாலாவின் அலுவலகத்தை நேற்று சூழ்ந்து கொண்டார்களாம் வருமான வரித்துறையினர். அவர்கள் மோப்பம் பிடித்து வந்ததற்கு காரணமே, ‘தாரை தப்பட்டை’ படத்தில் நேஷனல் சேனல் ஒன்று உள்ளே வந்ததுதானாம். படத்தில் காட்சிகளுக்குள்ளேயே வருகிறது அந்த சேனல். இப்படி வருவதற்கு கோடிக்கணக்கில் பணம் கை மாறியிருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில்தான் இந்த ரெய்டு நடந்ததாம்.

‘விவசாயி வீட்ல ரெய்டு நடத்துனா விதை நெல்லு கூட சிக்காது’ என்கிற உண்மை தெரிந்த வருமான வரித்துறைக்கு, பாலாவிடமும் அதே ரிசல்ட்தான் கிடைக்கும் என்பது மட்டும் தெரியாமல் போய்விட்டது போலும். கண்ணில் பவர் லைட் பொருத்திக் கொண்டு அலசி ஆராய்ந்தவர்கள், கடைசியாக ஒரு விஷயத்தை மட்டும் உரக்க சொல்லி கமென்ட் அடித்தார்களாம்.

“இவ்ளோ பெரிய டைரக்டர். கடைசியில் ஒண்ணும் சேர்க்காம அப்பாவியா இருக்காரே?”

ஆமாம்… ஒரு படத்தை எடுப்பதும், அந்த படத்திற்காக இன்னும் இன்னும் செலவு செய்வதும், கடைசியில் தனது சம்பளத்தை கூட அந்த படத்திலேயே கொட்டி அழுவதுமாக இருந்தால், எங்கேயிருந்து சேர்ப்பது?

அடுத்த முறை போவீங்களா சார்ஸ் அந்தப்பக்கம்?

1 Comment
  1. Sathik Batsha says

    aantha vikadan aasiriyar veetukku poyirunthaa sikkiyirukkum.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Bangalore Natkal Movie Stills

Close