இந்தியாவின் சூப்பர் ஸ்டார் சூர்யா! விஜய் ஆதரவாளரான விஐபி -யின் பேச்சால் பரபரப்பு

இன்று சென்னையில் நடந்த ‘அஞ்சான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மிக முக்கியமான விவாதம் ஒன்றை சைலன்ட்டாக அரங்கேற்றிவிட்டு போனார் பிரபல பைனான்சியரும், விநியோகஸ்தருமான மதுரை அன்பு செழியன். இன்று தமிழ்சினிமாவை ஆட்சி செய்வதே அன்புச்செழியன்தான் என்றால் அது அதிகப்படியான புகழ்ச்சியாக இருக்கப்போவதில்லை. ஏனென்றால் மதுரை மட்டுமல்ல, ஆல் தமிழ்நாடு விநியோகஸ்தர் என்ற நிலையிலிருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, பெரிய பெரிய நிறுவனங்களுக்கெல்லாம் கோடி கோடியாக கடன் கொடுத்து படத்தை வளர வைப்பதும் அவரேதான்! முடித்து வைப்பதும் அவரேதான்!

விஜய் தொடர்பான எந்த சினிமா விழாவாக இருந்தாலும் அன்புச்செழியன் இல்லாமல் நடந்ததேயில்லை. விஜய்யும் ‘அண்ணா அண்ணா’ என்று அன்புச்செழியனை வாயார புகழ்ந்து பேசி வருவதும் திரையுலகம் அடிக்கடி கண்ட விஷயம்தான். விஜய் படங்கள் எல்லாவற்றையும் இவர் மதுரை மற்றும் சுற்றுபுற ஏரியாக்களில் வாங்கி வெளியிட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய அன்புச்செழியன், சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட, சற்றே அதிர்ந்துதான் போனது நிருபர்கள் வட்டாரம். ஏன்? விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று மகுடம் சூட்டப்படும் நாள் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. அதுவும் அன்புச்செல்வனின் பிறந்த மண்ணான மதுரையிலேயே இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அவர் சூர்யாவை இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று பேசினால்? பரபரப்பு இல்லாமல் வேறென்ன?

அவர் யதார்த்தமாக பேசினாரா? அல்லது வேறு ஏதேனும் திட்டத்தோடு பேசினாரா? அல்லது நிஜமும் இதுவேதானா? இப்படி ஏராளமான கேள்விகளோடு கலைந்தது கூட்டம். இதற்கு பதில் சொல்லவேண்டியது ரசிகர்கள் அல்ல, விஜய்யும் சூர்யாவும்தான்!

2 Comments
 1. jessy says

  பெருசா ஒன்னும் இல்ல தல-ய பின்னாடி தள்ள சைலண்டா வேலை பார்க்கறாங்கலாமாம்.

  வெளிய அப்படி இல்ல இப்படி இல்லன்னு பேசிக்கிட்டே விஜய் சைலண்டா காய் நகர்த்துறார். சூப்பர் ஸ்டார் பட்டம் தனக்கு தேவை இல்லன்னு நெஜமா நெனக்கிறவரா இருந்தா இந்த விழாவுக்கு ஒத்துக்கிட்டிருக்கவே கூடாது சொல்றது ஒன்னு செய்யிறது ஒன்னு

  பேருக்கு முன்னாடி யார் வேணும்னாலும் என்ன பட்டம் வேணும்னாலும் போட்டுக்கலாம் ஆனா தன்னோட நிஜ பலத்தை தியேட்டர்ல காட்டனும் அவங்க தான் உண்மையான சூப்பர் ஸ்டார்.

  அந்த வகையில எங்க தல – எப்பவுமே தல தான்

 2. kumar says

  A tamil person should be a superstar in tamilnadu, it can be vijay or suriya or danush but not Ajith , we don’t want one more kanada man as a superstar of tamilnadu,

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பாடகர் சூர்யா – அவரே விவரித்த அனுபவம்

பொழுதுபோக்கு நாடும் தமிழர்களுக்கு... ஆகஸ்ட் ஃபெஸ்டிவெல் ‘அஞ்சான்’தான்! மார்க்கெட்டிலிருக்கும் மெகா மெகா ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என்று பாட்டி சுட்ட வடையிலேயே பெரிய வடை இதுதான்!...

Close