நிகிதா எவ்ளோ அழகு?! வாயாரப் புகழ்ந்த இனியா! அப்புறம் ஏண்டா மழை வராது?
நிகிஷா பட்டேலை நேரில் பார்த்த பலரும் ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்றாகியிருப்பார்கள் நேற்று! அவர் நடித்த ‘கரையோரம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு அவர் வந்த கோலம் அப்படி! முன் பாதி திறந்து கிடக்க, முதுகு பக்கத்தில் விரல் வைத்தால் வெடித்துவிடுமோ என்கிற அளவுக்கு டைட்டான உடையில் அவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருக்க, போட்டோகிராபர்களின் கேமிராக்கள் அனைத்தும் கவர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படியொரு பேரிடர் சேர்ப்புப் பணியை எதிர்பார்க்காத கண்கள் தத்தளித்ததுதான் நிஜம்!
அதே விழாவுக்கு கழுத்திலிருந்து கால் வரைக்கும் போர்த்திய கோலத்தோடு வந்திருந்தார் இதே படத்தில் நடித்த இன்னொரு நடிகையான இனியா. பொதுவாகவே ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தால் தலைவலி நிச்சயம். ஆனால் இந்த படத்தை பொருத்தவரை அப்படியொரு அன்டர்ஸ்டான்டிங் இருந்திருக்கும் இருவருக்குள்ளும். அதை சந்தேகமற நிரூபித்தது இனியாவின் பேச்சு.
“இந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் நிகிதா அவ்ளோ அழகாயிருந்தாங்க. என் கண்ணே பட்டுடுச்சு” என்றார். ஓரிடத்தில் சேர்ந்து நின்றாலே முறைத்தபடி நிற்கும் நடிகைகளுக்கு மத்தியில், தன் சக நடிகையின் அழகை இனியா வர்ணித்தது இடியுடன் கூடிய மழைக்கு ஒப்பான விஷயமல்லவா? இது ஒருபுறமிருக்க, கரையோரம் படத்தில் மிக முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறாராம் சிம்ரன். அவரது ஆக்ஷன் பிளாக் ஒன்றை பிரஸ்சுக்கு திரையிட்டு மகிழ்ந்தார் இயக்குனர் ஜே.கே. சும்மா சொல்லக்கூடாது. இரண்டாம் விஜயசாந்தி போல அவ்வளவு கம்பீரம் சிம்ரனிடத்தில். (என்ன காரணமோ? நிகழ்ச்சிக்கு வரவில்லை அவர்)
படத்தில் இனியாவையும், நிகிதாவையும் ஒரு சேர மேய்க்கும் அதிர்ஷ்டம் கன்னட ஹீரோ வஷிதா கணேஷுக்குதான்! இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மூன்று லாங்குவேஜ்ல ரிலீஸ் ஆகுது. தமிழ்ல ஒரு இடத்தை பிடிக்கணுங்கறதுதான் என்னோட லட்சியம் என்றார். முதல்ல சைட்டிஷ் ரெண்டு பேர் மனசுலேயும் இடம் பிடிச்சுட்டீங்களா? அதை சொல்லுங்க ப்ரோ…