புதுமுகங்கள் நடிக்கும் “ இஞ்சி முறப்பா “

புளு ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் வழங்க ராதாகிருஷ்ணா பிலிம் சர்க்யூட் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ இஞ்சி முறப்பா” என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஸ்ரீபாலாஜி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சோனி சிறிஷ்டா நடிக்கிறார். மற்றும் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர், சிட்டிபாபு, சாய்முருகன், ராதாகிருஷ்ணா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – P.R.K. ராஜு
யுகபாரதி பாடல்களுக்கு மணிசர்மா இசையமைக்கிறார்.
எடிட்டிங் – ஹரி
கலை – ஹரி.K
நடனம் – சொர்ணா / ஸ்டன்ட் – நந்து
தயாரிப்பு நிர்வாகம் – வாசு / நிர்வாக தயாரிப்பு – ராஜு
தயாரிப்பு – மலர்கொடி முருகன், A.P.ராதாகிருஷ்ணன்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் – S. சகா இவர் திரைப்பட கல்லூரியில் பயின்றதுடன் எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
படம் பற்றி அவரிடம் கேட்டோம்…..

தன் தங்கையை எப்படியெல்லாம் வாழ வைக்க வேண்டும் என்று அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்யாகிப் போகிறது ! தன் தங்கை காதலனிடம் ஏமாந்து போய் நிற்க அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை ! பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லி இருக்கிறோம் என்றார் இயக்குனர். படப்பிடிப்பு சென்னை, பாண்டி மற்றும் ஆந்திராவில் நடைபெற்றுள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பேஸ்புக், ட்விட்டர் , வாட்ஸ்அப் கண்டு அலறும் அர்ஜுன்

· ஜெய்ஹிந்த் – 2 என்ன மாதிரியா உள்ளடக்கம் கொண்டது ? இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஜெய்ஹிந்த் தேசப் பற்றை உள்ளடக்கிய படமாக வெளியானது. இந்த...

Close