ஷிர்டி சாய்பாபாவுக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் பறிமுதல் ஆவதற்கும் என்ன சம்பந்தம்?

இன்று கோடம்பாக்கம் முழுக்க ஒரே பேச்சுதான்! அது ஆஸ்கர் ரவிச்சந்திரன் வங்கியில் வாங்கிய கடன் வட்டியோடு சேர்த்து 97 கோடியாகிவிட்டது என்பதால் வங்கியில் அடமானமாக கொடுத்திருந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படுவதாக வந்த செய்தித்தாள் விளம்பர அறிவிப்பு பற்றியது! சொல்ல முடியாது. இன்று கோடம்பாக்கத்தில் பல இடங்களில் சந்தோஷமான ‘சியர்ஸ்’ பார்ட்டிகள் நடக்கலாம். சில இடங்களில் இதே பார்ட்டி கண்ணீரோடும் நடக்கலாம். காரணம், எதிரிகளையும் ஆதரவாளர்களையும் ஒரே நேரத்தில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

தனக்கு பிடிக்காதவர்களையோ, அல்லது தொழில் போட்டியாளர்களையோ, சமயம் பார்த்து காலை வாரி விடுவதில் சமர்த்தர் அவர்! இப்படிதான் அவரிடம் ‘அனுபவித்தவர்கள்’ (?) சொல்கிறார்கள். ஒரு படத்தை அதிக விலை கொடுத்து வாங்கிக் கொள்வதாக ஆசை காட்டுவார். அந்த பணம் வரும் என்று காத்திருக்கும் கடைசி நேரத்தில், படம் வேணாம் போ… என்று கூறிவிடுவார். கண்ணை கட்டி காட்டில் விட்டுவிட்டாரே என்று அவர்கள் அதிர்ச்சியால் தவிப்பதை தொலைவில் இருந்தே ரசிப்பார் என்றெல்லாம் அவர் குறித்த புலம்பல்கள் இருக்கின்றன. கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், ‘வாங்க படம் பண்ணலாம்’ என்று இரண்டு வருடங்கள் வரைக்கும் இழுத்தடிப்பார். திடீரென்று ‘எனக்கு அப்படியொரு ஐடியாவே இல்லை. கிளம்புங்க’ என்று கூறிவிடுவார். ‘ஐயோ, ரெண்டு வருஷம் வெட்டியா போச்சே’ என்று அழுதுகொண்டே கிளம்புவார்கள் அவர்கள். இப்படி ஏமாந்த இயக்குனர்களின் எண்ணிக்கையே ஐம்பதை தாண்டும் என்கிறது கோடம்பாக்கம்.

இருந்தாலும் பல கோடிகளை வியாபாரத்தில் புழங்க விட்டவர் என்பதால், அவரை சுற்றி எப்போதும் ஒரு மீடியேட்டர் கூட்டம் இருக்கும். வருகிற லாபத்தில் சதவீத கமிஷன் பெற்றே கோடீஸ்வரர்கள் ஆனவர்கள் அவர்கள்.

இந்த சூழ்நிலையில்தான் இந்த ஜப்தி நோட்டீஸ். தமிழ்சினிமா வியாபாரமும், பட்ஜெட்டும் கட்டுக்குள் இருந்த காலத்தில் தொழிலும் சுபமாகதான் போய் கொண்டிருந்தது. ரஜினியை குபேரன் என்று கொண்டாடியது தமிழ்சினிமா. அப்படியாப்பட்டவரையே, வீடு தேடி முற்றுகையிடுகிற அளவுக்கு நடுவீதிக்கு தள்ளிவிட்ட சாபம் இவரைப் போன்ற ஒருசில முதலாளிகளையே சாரும். முதலீடு மற்றும் வியாபாரத்தின் காலை அகல விரித்து வைத்தவர்கள் இருவர்தான். ஒருவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இன்னொருவர் கே.டி.குஞ்சுமோன். அதற்கப்புறம் வந்தவைதான் கார்ப்பரேட்டுகள். அவர்களும் தங்கள் பங்குக்கு அதன் காலை இன்னும் விரிக்க விரிக்க… தமிழ்சினிமா வியாபாரம் கவுரவமான கொள்ளையாகிவிட்டது. கவுரமான கொள்ளை இருந்தால், கவுரவமான பிச்சையும் இருக்கும்தானே?

சரி, அதெல்லாம் பெரும் ஆராய்ச்சிக்குரிய விஷயம். தற்போது அவரது சறுக்கலுக்கு காரணம் என்னவாக இருக்கும் என்று திரையுலக ஆன்மீக ஆராய்ச்சியாளர்கள் கருதுவதென்ன? தன்னை சுற்றி எப்போதும் ஜோதிடர்களையும் மாந்திரீகர்களையும் வைத்திருக்கும் ரவிச்சந்திரன், கடந்த சில வருடங்களுக்கு முன் தனது அலுவலகத்தையே ஷிர்டி சாய்பாபா கோவிலாக்கிவிட்டார். கீழ் தளத்தில் கோவில். மேல் தளத்தில் ஆஸ்கர் ரவிச்சந்திரனின் ஆபிஸ். சரியாக சொன்னால், ஷிர்டி சாய்பாபாவின் தலைக்கு மேல் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

தமிழ்சினிமாவில் ஒரு சென்ட்டிமென்ட் இருக்கிறது. ஒரு ஹீரோ நிற்பது போல போஸ்டர்! பின்னணியில் ஒரு கோவில் கோபுரம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த கோபுரத்தின் உயரத்திற்கு கீழேதான் தனது படம் இருக்க வேண்டும் என்று கூறிவிடுவார் அந்த ஹீரோ. கோபுரத்தை தாண்டி தனது உருவம் இருப்பது போல படம் இருந்தால், அந்த சாமியே தண்டிச்சுரும் என்பது அவர்களது அச்சம்.

இங்கேயும் அதே ரூல்சை ஃபாலோ பண்ணிதான் விமர்சனம் செய்கிறது சினிமாவுலகம். ‘அவர்ட்ட பலமுறை சொன்னோம். சாய்பாபா தலை மேல் நீங்க உட்காராதீங்கன்னு? கேட்கல. இப்போ அனுபவிக்கிறார்’ என்கிறார்கள் அவர்கள்.

இந்த சென்ட்டிமென்ட்தான் அவரை குப்புறத்தள்ளியதா? அல்லது அவருக்குள்ளிருந்து எல்லாரையும் கிள்ளுகீரையாக நினைத்த அன்னியனா? கேள்விகளுக்கு பதில் தேட வேண்டிய மிக முக்கியமான நேரம்தான் இது!

Read previous post:
ஆளே இல்லாமல் ஷுட்டிங், அரை நிர்வாணம்? பிட்டு பட ரேஞ்சுக்கு இறங்கிய ஹீரோயின்!

தனக்கு ஓயாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் ஒருவனின் ‘ஆ----------றுப்பை’ அறுப்பதுதான் சாரிகாவின் முதல் பட க்ளைமாக்ஸ். ஐயோ... இந்த பொண்ணு எப்படிறா இப்படியொரு கேரக்டர்ல நடிச்சுது? என்று...

Close