இதுவும் கபாலி ரஜினிதான்? கொளுத்துங்க கொளுத்துங்க…. நல்லா கொளுத்துங்க!
போட்டோஷாப் டிசைன் தெரிந்த அத்தனை விஷமிகளுக்கும் இது பரபர நேரம். ரஜினி பழைய புதிய ஸ்டில்களையெல்லாம் அள்ளியெடுத்து அதற்குள் வேறொரு வடிவத்தை நுழைத்து அற்புதமாக படைத்தால், அதுதான் அந்த நாளின் ட்விட்டர் ட்ரென்ட்டிங்! கபாலி படம் முடிவதற்குள் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு இன்னும் எத்தனை குடைச்சல்கள் யார் யார் மூலமாக வரப்போகிறதோ?
நீங்கள் மேலே பார்க்கும் ஸ்டில், யாரோ ஒரு கைதேர்ந்த புண்ணியவானின் கைவண்ணம். ஏதோ நிஜமாகவே மேக்கப் போடப்பட்டு எடுத்தது போலவே இருக்கும் இந்த ரஜினி படம் போட்டோஷாப்பில் வைத்து புனையப்பட்டிருக்கலாம். கமல், ரஜினி படங்கள் அறிவிக்கப்படும் போதெல்லாம் அவர்கள் படங்களை வைத்து இப்படி பட்டைய கிளப்பி வரும் இவர்கள் ஒரு டிசைனராக கோடம்பாக்கத்தில் நுழைந்தால் பெரும் பொருள் ஈட்டலாம்.
அதிருக்கட்டும்… இந்த புகைப்படம் பற்றி கபாலி இயக்குனர் பா.ரஞ்சித் என்ன சொல்கிறார்?
எல்லாம் பொய் சார். நம்பாதீங்க!
RUMOUR. DON;T BELIEVE THIS PHOTO