செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் பேரன் விக்ரமுக்கு ஏதாவது விருது இருந்தா கொடுங்க!

கடந்த இரண்டு நாட்களாக விக்ரமை மனிதருள் மாணிக்கம், தென்னாட்டின் தெய்வம், கேரளாவின் கேப்ரியல் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் சில பொழுதுபோகாத ரசிகர்களும், அவர்களை மிஞ்சிய ஊடகங்களும்! ஒரு விருது விழாவில் கலந்து கொள்வதற்காக விக்ரம் கேரளாவுக்கு சென்றிருந்தார். அங்கே ஒரு ரசிகர் இவரை ஆரத்தழுவி செல்ஃபி எடுக்க முயல செக்யூரிடிகள் அவரை பரபரவென இழுத்து சென்று கொண்டிருந்தார்கள்.

அந்த ரசிகரின் பரிதாப முகத்தை பார்த்த விக்ரம், “அவரை ஏன் தடுக்கிறீங்க, விடுங்க” என்று செக்யூரிடியை கடிந்து கொண்டதுடன் அந்த ரசிகரிடம் நின்று படமெடுத்துக் கொண்டார். அப்போது அந்த ரசிகர் இவரை கட்டித்தழுவி தன் அன்பை வெளிப்படுத்தி முத்தமும் கொடுத்தார். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார் விக்ரம். இது யு ட்யூபில் படமாகவும் வெளியாகியிருக்கிறது. ஒரு ரசிகனை அவன் விரும்பும் நடிகர் ஒருவர் அணைத்து போட்டோ எடுத்துக் கொள்வது பெரிய தியாகமா? சாதனையா? உலகம் போற்றக் கூடிய விஷயமா? அதுவும் தொடர் பிளாப் மூலம் மார்க்கெட் போன ஒரு நடிகர்?

இப்படியெல்லாம் ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், இதையெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் விளம்பரம் செய்யும் ஊடகங்களை என்ன செய்வது? எவ்வளவோ தியாகங்களை செய்துவிட்டு அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை விட்டுவிட்டு, இப்படி பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத விஷயங்களுக்காக ஒருவரை புகழ ஆரம்பித்தால் என்னாகும்? தமிழ்நாட்டில் மேலும் ஒரு மார்க்கெட் போன நடிகருக்கு முதல்வர் ஆசை வரும்.

அதைதான் செவ்வனே செய்திருக்கிறீர்கள். திருப்தியா ஊடகங்களே?

Read previous post:
நாங்களும் பிழைக்கணும்… வழி விடுங்க! நடிகர் சங்கத்தின் நியாயமான கோரிக்கை

தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் தலைமையில் செயற்குழு உறுபினர் A.L.உதயா ,நியமன செயற்குழு உறுபினர்கள் லலிதா குமாரி , மனோபாலா ,அஜய் ரத்தினம் ஆகியோர்...

Close