சீமான் சிம்பு காம்பினேஷன்! நழுவுகிறதா லைகா?

‘எழுதி வச்சுக்க… அடுத்த சூப்பர் ஸ்டாரு என் தம்பி சிலம்பரசன்தான்’ என்று சொல்லி வாய் மூடுவதற்குள் குழி பறிக்க ஆரம்பித்துவிட்டது கோடம்பாக்கம். சீமானின் சபதத்தில் சிலபல ராஜ தந்திரங்களை ஏவி விட கிளம்பிவிட்டது ஒரு குரூப்! சீமான் படம் எடுத்துவிடக் கூடாது என்பதை விட, சிம்புவும் லைகாவும் இனி ரிப்பீட் அடித்துவிடக் கூடாது என்கிற லட்சிய வெறிதான் அதில் அதிகம் தெரிகிறது.

லைகாவுடன் இணக்கமாக இருந்த சிம்பு, சில தினங்களாக தன் இணக்கத்தில் எரிமலையை பற்ற வைத்திருக்கிறாராம். ஏன்? சிம்புவுக்கு தர வேண்டிய சம்பளத்தில் கை வைத்தால் சும்மாயிருப்பாரா? ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் கடைசி நேர சம்பள தவணை இன்னும் வழங்கப்படாமலிருக்கிறது. இதையடுத்து தன் ஆத்திரத்தை காட்ட ஆரம்பித்த சிம்பு, வ.ரா.வ படத்திற்கு சரியான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்கிறார்கள். (சொன்னா கேட்கிற முரட்டுக்காளையை சோதிச்சுப் பார்த்தா சும்மாயிருக்குமா?)

கைநிறைய பணம் வைத்திருக்கும் லைகா, இந்த பிசாத்து தொகையை தராமல் இழுத்தடிக்கக் காரணமே சிம்புவை டென்ஷன் பண்ண வேண்டும் என்பதற்காகதானாம். இப்படி செய்தால் தானாகவே சீமானை இழுத்துக் கொண்டு அவர் வேறு கம்பெனிகளுக்கு சென்றுவிடுவார். சீமானின் சமரசமில்லா அதிரடி படத்தை தயாரிக்கும் ஆபத்திலிருந்து விடுபட்டுவிடலாம் என்பதுதான் லைகாவின் திட்டமாகவும் இருக்கிறதாம்.

எப்படியோ, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தின் ஷுட்டிங்கை முடித்து பூசணிக்காய் உடைத்துவிட்டார்கள். ஆனால் சீமான் சிம்பு காம்பினேஷனுக்கு பூசணிக்காய் உடைக்க நினைத்தால்… அது நடக்கவே நடக்காது என்பதை காட்ட வேண்டிய பெரும் நிர்பந்தத்திலிருக்கிறார் சிம்பு.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஸ்வாசம் / விமர்சனம்

Close