மு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி! நாகரீக அரசியலுக்கு திரும்புகிறதா தமிழ்நாடு?

எதிரெதிர் கட்சி எம்.எல்.ஏக்கள் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டால் கூட, முகத்தை இடுப்புக்கு கீழே பதுக்கிக் கொண்டு ஓட்டம் எடுக்கிற அளவுக்கு தலைமையால் நசுக்கிப் பிழியப்பட்டு வந்த நாகரீகம், ஜெ.வின் மறைவுக்கு பின் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. “நார்த்ல இருக்கிற பண்பாடு, நமக்கு இல்லையே” என்று பலமுறை மக்கள் புலம்பி வந்த நிலையில், மீண்டும் ஒரு நாகரீக அரசியலுக்கு தமிழ்நாட்டை மாற்றிவிடுவார் போலிருக்கிறது ரஜினி. ஏன்?

இன்று அவர் பேசிய ஸ்பீச் அப்படி!

நான் ஏன் அரசியலுக்கு வரணும்? தமிழ்நாட்டில் நல்ல தலைவர்களே இல்லையா? என்று கேட்டு அதற்கு விளக்கம் கொடுத்த ரஜினி, மு.க.ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகிய நான்கு தலைவர்களின் பெயரையும் குறிப்பிட்டு, அவர்களின் திறமைகளையும் சொன்ன போது அதை கேட்டுக் கொண்டிருந்த அத்தனை பேருக்கும் ஆச்சர்யம் தலை தூக்கியது. இவங்கள்லாம் நல்ல தலைவர்கள்தான். ஆனால் சிஸ்டம் கெட்டுப் போயிருக்கே? அதை சரி செய்யணுமே? என்று தனது அரசியல் என்ட்ரியை உறுதி படுத்தினார் ரஜினி.

சோஷியல் மீடியாவில் தன்னை தலைகுப்புற திட்டுகிறவர்களை பற்றி வருந்திய அவர், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசணுமா தமிழன் என்றும் குறைபட்டுக் கொண்டார்.

ரஜினி ஒரு கன்னடன் என்கிற வாதத்திற்கும் கிட்டதட்ட முற்றுப்புள்ளி வைத்தார் அவர்.

எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டு தான் கர்நாடகாவில் இருந்தேன் எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள், அதனால் நான் பச்சைத் தமிழன்”. “என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் தான் வீழ்வேனே தவிர வேறு மாநிலத்திற்கு போக மாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும், இல்லாவிடில் சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்ல வேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்” என்றார்.

ஆக மொத்தத்தில், ஐந்தாம் நாள் போட்டோ ஷுட் முடிந்ததும் ரஜினி ஒரு அழுத்தமான முடிவுக்கு வருவார் என்று நம்பியிருந்த அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

எத்தனை கட்சிக் கூடாரங்கள் காலியாகப் போவுதோ? அல்லது விஜயகாந்த்தை லூஸ் ஆக்கி ரிட்டையர்டு ஸ்டேஜுக்கு தள்ளியதை போல, இவரையும் தள்ளிவிடுவார்களோ என்னவோ? தமிழ்நாடே வெயிட்டிங்….

https://www.youtube.com/watch?v=zbnMSWgjDxM&t=12s

Read previous post:
Thupparivaalan Movie Stills

Close