வெளிநாட்டில் லிங்கா படப்பிடிப்பு – கே.எஸ்.ரவிகுமார் போகாததற்கு அனுஷ்கா காரணமா?

லிங்கா படத்தின் பாடல் காட்சிக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று அழைத்தார்களாம் அனுஷ்காவை. அவர் கண்டிப்பாக நோ சொல்லிவிட்டார். அந்த பாடலை உள்ளூர்லேயே எங்காவது எடுக்கக் கூடாதா என்பது அவரது கேள்வி. ஆனால் ரஜினி படம், கே.எஸ்.ரவிகுமார் இயக்கம். அதுவும் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவது. வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சி கூட எடுக்காவிட்டால் எப்படி? கடும் கோபத்திற்குள்ளானராம் கே.எஸ்.ரவிகுமார்.

அப்புறம் எப்படியோ அனுஷ்காவிடம் பேச வேண்டியவர்கள் பேசி பயணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டார்கள். இந்த வாரம் சுவிஸ் பயணம். ஆனால் படத்தின் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் போகவில்லை. அப்படீன்னா…? அனுஷ்காவிடம் பேசப்பட்ட சமாதானம் ‘அதுதானா?’

ஆனால் அவர் வெளிநாட்டுக்கு போகாததற்கு காரணம் கே.எஸ்.ரவிகுமாரின் கோபம் அல்ல. வேறொன்று என்கிறார்கள் படக்குழுவினர். என்னவாம்? பாகுபாலி படத்தில் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதில் ஒரு ஆணுக்கு நிகரான பல காட்சிகளில் அனுஷ்கா டூப் போடாமல் நடித்து வருகிறாராம். ஒரு நாள் படப்பிடிப்பு இல்லையென்றாலும் ரெஸ்டில் இருக்கவே பழகியிருக்கிறார். அதனால்தான் லிங்கா வெளிநாட்டு ஷெட்யூலுக்கு மறுப்பு சொன்னாராம். பொதுவாக வெளிநாட்டில் ஷுட்டிங் போனால், ரெஸ்ட் எடுக்கிற நேரம் குறையும். அதனால்தான் இப்படி என்கிறார்கள்.

கே.எஸ்.ரவிகுமார் போகாததற்கும் ஒரு காரணம் இருக்கிறதாம். போஸ்ட் புரடக்ஷன் வேலைகளை பார்க்க வேண்டியிருக்கு. வெறும் டான்ஸ் காட்சிதானே? அதை டான்ஸ் மாஸ்டர் பார்த்துக் கொள்வார். நான் எதுக்கு என்கிறாராம். பிரச்சனை மாதிரி இருந்தாலும், பிரச்சனையில்லை லிங்காவில்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வனிதாவுக்கு நேர்ந்த கொடுமை

பொதுவாகவே கடல் சார்ந்த இடங்களில் படம் எடுப்பது என்பது சுனாமியை சொல்லாமலே அழைக்கிற அளவுக்கு கொடூரமானது. படப்பிடிப்பு குழுவினரை சுற்றி சூழ்ந்து கொள்ளும் மீனவ கிராமத்தினர், எங்களுக்கு...

Close