அட… செல்வராகவனா இப்படி?
முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை ‘பவுண்டட் ஸ்கிரிப்ட்’ என்கிறார்கள் சினிமாவில். டைரக்டர் பாலா, செல்வராகவன், கவுதம்மேனன் போன்ற டாப் இயக்குனர்களை பொறுத்தவரை இதுதான் கெட்ட வார்த்தை! சூர்யா, கவுதம் மேனனிடம் பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டதால்தான் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டு, கவுதம் படத்தை கை கழுவினார் சூர்யா. பலரும் இந்த ‘பவுன்டட் ஸ்கிரிப்ட்’ கட்சிக்கு தாவிவிட்டதால், “முதல்ல சாங் மட்டும் எடுத்துக்கலாம். அப்படியே ஷுட்டிங் நகர நகர, ஸ்கிரிப்ட் எழுதிக்கலாம்” என்று பம்மாத்து காட்டும் இயக்குனர்களுக்கு பலத்த ஷாக் ஏற்பட்டிருக்கிறது.
இனி அறிமுக ஹீரோக்களை கூட அப்ரசண்டு டைரக்டர்கள் ஏமாற்றிவிட முடியாது என்கிற அளவுக்கு அந்த விஷயத்தில் அவெர்னஸ் வந்திருக்கிறது நடிகர்களுக்கு. இப்போது ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்திற்காக அவரது பைண்ட் செய்யப்பட்ட திரைக்கதை வசனப் புத்தகத்தை கொடுத்துதான் மனைவி கீதாஞ்சலியை படம் எடுக்க வைத்திருக்கிறார் செல்வராகவன். இந்த படத்தில் தனது பங்கு இது மட்டும்தான் என்று அவர் சொன்னாலும், ட்யூன் கேட்டு ஓ.கே செய்தது முதல், ஒளிப்பதிவாளர், ஆர்ட் டைரக்டர்களுக்கு ஆலோசனை கொடுத்து இப்படத்தை உருவாக்குகிற ஒவ்வொரு வினாடியும் அவர் பங்கும் இருந்ததாக கதைக்கிறது நிஜம்.
எப்போது தனது கதையை எவ்வித குழப்பமுமில்லாமல் எழுதி, அதை பைண்டிங் செய்து வைத்திருந்தாரோ? அப்பவே செல்வராகவனின் புதிய பாதையில் வெளிச்சம் விழ ஆரம்பித்துவிட்டதாக அர்த்தம் கொள்ள வேண்டியதுதான். அதன் விளைவாக மீண்டும் ஒரு புதுப்படத்தை ஆரம்பிக்கவிருக்கிறார் அவர்.
இதில் எஸ்.ஜே.சூர்யாதான் ஹீரோவாம். அவர் நடிக்க, செல்வராகவன் இயக்க, படத்தை தயாரிப்பது கவுதம் மேனன் என்கிறது லேட்டஸ்ட் தகவல்கள். டிஞ்சர், பஞ்சு ஏதாவது வேணும்னா முன்னாடியே வாங்கி வச்சுக்கோங்க படைப்பாளிஸ்…