பணிந்தாரா விஷால்? பெப்ஸி விஷயத்தில் தயாரிப்பாளர்கள் அதிருப்தி!
முதல் தகவல் அறிக்கை- பெப்ஸி ஸ்டிரைக் வாபஸ்! காலா, மெர்சல், உள்ளிட்ட முன்னணி திரைப்படங்களின் வேலைகள் ஆரம்பம்!
இனி மேட்டருக்கு வருவோம்!
பல நேரங்களில் பாகுபலியாக கைதட்டல் வாங்கும் விஷால், சில நேரங்களில் பல்வாள்தேவனாக மாறி மொக்கை வாங்குகிற கொடுமையை எங்கு போய் சொல்ல? அதிலும் பெப்ஸி விவகாரத்தில் விஷால் படு ஸ்டிராங்காக இருப்பார் என்கிற எண்ணத்தை தவிடு பொடியாக்கிவிட்டதாம் சமீபத்திய பெப்ஸியுடனான பேச்சு வார்த்தை.
பெப்ஸி தொழிலாளர்களை மட்டும்தான் வைத்து வேலை செய்ய வேண்டும் என்கிற வாதத்தை அடியோடு நொறுக்குவார் விஷால் என்ற தயாரிப்பாளர்களின் நம்பிக்கை, தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் பொடி பொடியாகிவிட்டதாக தகவல். சம்பளம் மற்றும் பேட்டா விஷயங்களில் பல மடங்கு கீழே இறங்கி வந்ததால் இனி பெப்ஸியோடு(மட்டும்) இணைந்து பணியாற்றலாம் என்ற முடிவை விஷால் எடுத்திருப்பதாக கூறுகிறார்கள்.
பெரிய படங்களின் ஷுட்டிங் நிறுத்தப்பட்டிருப்பதால், கிடுக்கிப்பிடி போட்டு விஷாலை இந்த முடிவெடுக்க தூண்டியிருக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், சிறுபட தயாரிப்பாளர்கள் பெப்ஸியின் அராஜகத்தை தாங்க மாட்டார்கள் என்பதுதான் நிஜம்.
“பெப்ஸி தொழிலாளர்கள் மட்டும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சாராத டி.வி ஷுட்டிங், கல்யாண விழா, காதுகுத்து, கோவில் திருவிழாக்களில் பணியாற்றலாம். ஆனால் தமிழ் திரைப்பட சங்கம் மட்டும் வேறு ஆட்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்றால், அது என்னய்யா நியாயம்?” என்று வெடிக்கிறார்கள் இங்கே.
இந்த பஞ்சாயத்தில் ஈடுபட்ட விஷாலின் இமேஜ் முதல் முறையாக தடுக்கி விழுந்திருக்கிறது. ஊரே கைதட்டி சிரிப்பதற்குள் அவர் சுதாரித்து எழுந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சிறுபட தயாரிப்பாளர்களின் கோரிக்கையாகவும் இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=R-AYXxGoYBU
No sir, no decision made on that . Vishal did not agree. Preferrance will give to FESCI members but work only with FESCI not right.
They agree to withdraw the advertisement( after considering with members)