ஜெய் படம்… கமிஷனில் குளித்த இயக்குனர்?
சென்னை கோவை போன்ற நகரங்களில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் தவிர மற்ற தியேட்டர்களில் எல்லாம், இங்கு குறைந்த விலைக்கு பிளாட்கள் விற்கப்படும் என்று போர்டு வைக்காத குறைதான். அந்தளவுக்கு நாளுக்கு நாள் கலெக்ஷ்ன் வளைந்து அவ்வையின் முதுகு போலாகிவிட்டது. இன்னும் சில மாதங்களில் சுமார் 300 தியேட்டர்கள் மூடப்பட்டாலும் ஆச்சர்யமில்லை என்கிறது வயிறெரிச்சலான வசூல் நிலவரம். இந்த நேரத்தில் நடிகர் நடிகைகள் தங்கள் சம்பளத்தையும், இயக்குனர்கள் தயாரிப்பு செலவையும் குறைத்தாலொழிய சினிமாவை காப்பாற்ற அந்த எம்ஜிஆரே உயிரோடு வந்தாலும் முடியாது என்கிற நிலைமைதான் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த கலவரங்கள் எதையுமே உணராமல் கோடிகளை கூட்டிக் கொண்டே போகிற நடிகர்கள் வரிசையில் சேர்ந்திருக்கிறார் ஜெய். இவர் மீண்டும் நடிக்கப் போகும் ஒரு படத்திற்காக ஜெய் வாங்கிய சம்பளம் மூன்று கோடி என்கிறது முக்கியமான சோர்ஸ்… வேடிக்கை என்னவென்றால் இந்த சம்பளத்தை அவருக்கு பெற்றுத்தந்திருக்கும் இயக்குனருக்கு அதிலிருந்து ஐம்பது லட்ச ரூபாய் கட்டிங் போயிருக்கிறதாம்.
உலகத்தில் எங்குமே நடவாத அதிசயம் இது என்கிறார்கள். பொதுவாக புரோக்கர்கள்தான் இவ்வித செயலில் ஈடுபடுவார்கள். ஆனால் ஜெய்க்கு ஒரு ஹிட் கொடுத்த அந்த இயக்குனரே சம்பளம் பேசி, அதிலிருந்து தனக்கு ஐம்பதை ஒதுக்கிக் கொண்ட அவலம் வேறெங்கும் நடக்காது என்று கவலைப்படுகிறது அந்த சோர்ஸ். யாரோ வசதியுள்ள மவராசன் கொடுக்கிறாரு. வாங்கிட்டுதான் போகட்டுமே என்று இந்த விஷயத்தை விட்டுவிட தோன்றினாலும், பின்னாலேயே ஜெய்யிடம் கால்ஷீட் கேட்டுப் போன இன்னொருவருக்கு நேர்ந்த அவலத்தை கேட்டால் இந்த கமிஷன் சம்பவத்தை கண்டிக்கவே தோன்றும்.
லேட்டஸ்ட்டா கமிட் பண்ணுன படத்துக்கு மூணு கோடி வாங்கியிருக்கேன். நீங்க எவ்வளவு தருவீங்க என்கிறாராம் ஜெய்.
சினிமா என்பதே மாயை, இதில் எப்படி ஒழிப்பது இந்த சம்பளமெனும் பேயை?