கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையா…! அஜீத் மாதிரி ஆக முடியுமா ஜெய்?

இதை காமெடியாக எடுத்துக் கொள்வீர்களோ, சீரியஸாக எடுத்துக் கொள்வீர்களோ? கரப்பான் பூச்சிக்கு கட்டபொம்மன் மீசையை ஒட்டியாச்சு!

கடந்த சில மாதங்களாகவே நான் அஜீத்தின் ரசிகன் என்று ஜெய்யும் சிம்புவும் தானாக முன் வந்து அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘அவரது ரசிகர்களை வளைக்கிற முயற்சியாக கூட இருக்கும்ப்பா…’ என்று மற்றவர்கள் சந்தேகப்பட்டாலும், ‘வாங்க தம்பிகளா’ என்று அழைத்து தோளில் கை போட்டுக் கொள்கிறார் அஜீத்தும். இந்த சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்ததன் காரணமாக ஜெய்யின் மனசிலும் அந்த ரேஸ் ஆசை வந்துவிட்டது. தன்னை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர்களுக்கு இம்சை கொடுத்த நேரம் போக மற்ற நேரங்களில் தானும் ஸ்டியரிங் பிடிக்க கற்றுக் கொண்டார் நடிகர் ஜெய். சென்னையில் அங்கும் இங்கும் தாறுமாறாக காரை ஓட்டி பழகியவர், நேரடியாக ஒரு கார் ரேசில் கலந்து கொண்டார் . இருங்காட்டு கோட்டையில் நடந்தது அந்த ரேஸ்.

சீருடைகள்… ஹெல்மெட்… உயர் ரக விர் விர் கார் எல்லாம் ரெடி. காரை கிளப்பி ரேஸ் நடக்கும் டிராக்குக்குள் போக வேண்டுமே? முக்கி முனகிவிட்டாராம். வண்டியை திருப்பி கோட்டுக்குள் கொண்டு வரவே முடியவில்லை அவரால் என்கிறார்கள் சுற்றியிருந்து ‘கெக்கே பிக்கே’ ஆனவர்கள். முறையாக பிராக்டீஸ் செய்து ரேசுக்கு போன அஜீத்தையே, ‘எதுக்குப்பா இவருக்கு இந்த வேலையெல்லாம்? நாலு படத்துல நடிச்சோமா? கோடிகளை குவிச்சோமான்னு இல்லாம?’ என்று முணுமுணுத்தது கோடம்பாக்கம். ‘எந்த நாயும் எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்’ என்று சில தயாரிப்பாளர்களை பற்றி பேட்டியளிக்கிற அளவுக்கு டென்ஷன் ஆனார் அஜீத் அப்போது.

அவருக்கே அப்படியென்றால் சாதாரண ஜெய்யின் நிலைமையெல்லாம் என்ன கதியாகும்? ‘தம்பி… முதல்ல தயாரிப்பாளர்கள், டைரக்டர்களுக்கு தலை சுத்த வைக்கிறத நிறுத்திட்டு அப்புறம் ரேஸ்ல போய் சுற்று. யாரு வேணாங்கிறா?’ என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

இரண்டு ஹிட்டும் நாலு காசும் வந்தால், ஒட்டக பால்ல டீ போடச் சொல்ற ஊராச்சே? ஜெய் என்ன பண்ணுவாரு பாவம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எட்டு வருஷ போராட்டத்தையே என்னால தாங்க முடியல… விஜய் சேதுபதி ஓப்பன் டாக்!

இருபத்தைந்து வருட போராட்டம்! எப்படியோ நேமிசந்த் ஜபக், விஜய் சேதுபதி புண்ணியத்தால் இயக்குனராகிவிட்டார் ஜெய் கிருஷ்ணா. இவர் இயக்குகிற ‘வன்மம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் பேசிய...

Close