ஆஹா வட போச்சே! மெட்ராஸ் ஹிட்! நடிகர் ஜீவா ஷாக்!

யாருக்கு என்ன கொடுப்பினையோ, அதுதான் நடக்கும் என்பதற்கு தமிழ் சினிமாவில் ஓராயிரம் உதாரணங்கள் உண்டு. சேது படத்தில் விக்னேஷ் நடிக்க வேண்டியது. சுப்ரமணியபுரம் படத்தில் சாந்தனு நடிக்க வேண்டியது. திமிரு படத்தில் ஸ்ரீகாந்த் நடிக்க வேண்டியது. இப்படி கை நழுவிப்போன படங்களை எண்ணி கன்னத்தில் கை வைக்க வேண்டிய சூழ்நிலையை பலருக்கும் உருவாக்கி பதைபதைக்க வைத்திருக்கிறது விதி.

அப்படிதான் மெட்ராஸ் படத்திலும் ஜீவா நடித்திருக்க வேண்டியது! இந்த படத்தின் கதையை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாவிடம் கூறியிருந்தார் இயக்குனர் ரஞ்சித். நன்றாக இருப்பதாக கூறிய அவர், ஜீவாவிடம் கதை சொல்ல அனுப்பினாராம். கதையை கேட்ட ஜீவா உதட்டை பிதுக்கியதுடன், இந்த கதையில் எனக்கு என்ன ஹோப் இருக்கு என்று கூறி அனுப்பிவிட்டாராம். அதோடு போயிருந்தால் பிரச்சனையேயில்லை.

அவங்கிட்டயே ஒரு ஹீரோ இருக்கார். (கார்த்தி) அவரை வச்சு இந்த படத்தை எடுக்க வேண்டியதுதானே? கதையில் அவருக்கு ஹோப் இல்லேங்கறதுக்காகதான் என்னை மாதிரி ஹீரோவை தேடி அலையுறாங்க போலிருக்கு என்று நக்கல் அடித்தாராம். இந்த தகவல் காதில் விழுந்த பிறகுதான் அதுவும் நல்லதுதான் என்ற முடிவுக்கே வந்தாராம் ஞானவேல்ராஜா. ஸ்கிரிப்ட் கார்த்தியிடம் கொடுக்கப்பட்டது. நான் நடிக்கிறேன். இந்த ஸ்கிரிப்ட் மீது எனக்கு நம்பிக்கையிருக்கு என்றாராம் கார்த்தி.

பிளாஷ்பேக் ஓவர். இன்று மெட்ராஸ் படத்தின் நிலைமை என்ன? திரும்புகிற இடமெல்லாம் கைதட்டல்தான். இந்த வாரம் வெளியான ஜீவாவும் சரி, மெட்ராசும் சரி. ரசனைக்குரிய படம் என்ற தீர்ப்பை தந்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

ஐயய்யோ… வட போச்சே என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஜீவா! தலைக்கு மேல மழை பெய்தாலும் தார் பாயை போட்டு மூடிக்கொண்டால் இப்படிதான்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பத்திரிகையாளர்கள் தமிழ் திரைப்பட பாதுகாப்பு படை பிரச்சனை முடிவுக்கு வந்தது

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில்...

Close