என்னது… கத்தி படத்தை எதிர்க்கிறாங்களா? ஜீவா கேள்வி, நிருபர் அட்மிட்?

‘என்னது… கத்திய எதிர்க்கிறாங்களா? யாரு? ஏன்? இப்படி ஒரு ஹீரோ அடுக்கடுக்காக கேள்வி கேட்டால் எப்படியிருக்கும்? ‘என்னது இந்திரா காந்தி செத்துட்டாங்களா?’ ரேஞ்சுக்கு ஒரு கேள்வி கேட்டு, இத்தனை காலம் குய்யோ முய்யோ என்று கத்திக்கு எதிராக குரல் கொடுத்த தமிழின போராளிகளையெல்லாம் பல் கடிக்க வைத்திருக்கிறார் நடிகர் ஜீவா. அண்மையில் ஒரு நிருபர் இவரிடம், கத்தி படத்திற்கு வந்த பிரச்சனையை எப்படி பார்க்கிறீங்க என்று கேள்வி கேட்டு, அவர் சொன்ன பதிலால் ஆஸ்பிடலில் அட்மிட் ஆகாத குறை.

விஜய் பாடுன செல்ஃபி புள்ள பாட்டு கேட்டேன். பிடிச்சிருந்தது. ஆனா கத்திக்கு பிரச்சனை வந்ததா என் காதுக்கு எதுவும் நியூஸ் வரல. ஏதோ அது இதுன்னு மற்றவங்க சொன்னதையெல்லாம் நம்பி நான் இந்த விஷயத்துல இறங்கி விசாரிக்க முடியாது. என் படம் ஓடுதா, ரெஸ்பான்ஸ் எப்படின்னு பார்க்கறதுதான் என் வேலை என்று கூறியிருக்கிறார் ஜீவா. (இத்தனைக்கும் விஜயின் மேனேஜர்தான் ஜீவாவுக்கும் மேனேஜர்)

சக ஹீரோவுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் தலையிட்டால், நம்ம பாட்கெட்லதான் நண்டுவாக்கிளி ஊறும் என்பதை தெளிவாக புரிந்து கொண்ட ஜீவா போன்றவர்களுக்கு தமிழ்சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது. விஜய் சார்… நண்பன் செகன்ட் பார்ட் எடுத்தால் கட்டாயம் ஜீவாவை சேர்த்துக்கோங்க!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அது கவர்ச்சியா, கவுச்சியா? சென்சாரை மிரள வைக்கப்போகும் வனிதா!

நடிகை மஞ்சுளாவின் மகள் வனிதா போலீஸ் கமிஷனர் ஆபிசுக்கு வந்தாலே பரபரப்பு தொற்றிக் கொள்ளும். யாராவது ஒரு நபரை பற்றி புகார் கொடுப்பதுடன் ‘அடித்தான்... உதைத்தான்... பணம்...

Close