சிபிராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜீவா! நட்புக்குள் ஒரு நறநற…?

மார்க்கெட்டில் வேண்டுமானால் சிபிராஜின் லெவல் சின்னதாக இருக்கலாம். ஆனால் நட்பு வட்டாரத்தில் அவர் எல்லாருக்கும் ஸ்பெஷலானவர். ஆர்யா, ஜீவா, விஷால், ஜெயம்ரவி கூட்டணியில் சிபிராஜுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் தனி நாற்காலி போட்டு அமர வைத்திருக்கிறது அந்த தோழர்ஸ் மனசு! இந்த நிலையில்தான் நட்புக்கு இலக்கணமாக இருந்த ஜீவாவும் சிபிராஜும் கைகலப்பில் இறங்கி கன்னத்தை பழுக்க வைத்துக் கொண்டார்களாம். இது குறித்த தகவல்கள் வருமாறு-

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுக்கும் ஹன்சிகாவுக்குமான காதலை புகுந்து கெடுக்கும் வாலிபரின் கேரக்டரில் நடித்திருக்கிறார் சிபிராஜ். இந்த கதையை அவர் ஜீவாவிடம் சொல்லி கால்ஷீட் வாங்கிய பின், சிபிராஜை சந்தித்து கதையை சொன்னாராம். ஆனால் அப்போது ஜீவாவின் கேரக்டரை பற்றி மூச்சு விடாமல் சிபிராஜின் சீன்களை மட்டும் சொல்லியிருக்கிறார். “எனக்கு இந்த சீன்கள் ஓ.கே. அவனுக்கு?” என்று கேட்டாராம் சிபிராஜ். அதற்கப்புறம் இவர் ஜீவாவின் ரோலை பற்றி விவரிக்க, உடனே ஜீவாவுக்கு போன் போட்டு, “மச்சி சூப்பர்டா” என்றாராம் சிபி.

அப்படியொரு நட்பிலிருந்த இருவருக்கும் நடுவில்தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் கைகலப்பு. கதைப்படி ஒரு பைட் சீன். சிபிராஜ் ஜீவாவை அடிக்க வேண்டும். அவர் அடித்து இவரை கீழே தள்ள, அதில் ஒரு சுரத்தும் இல்லையே என்று பீல் பண்ணினாராம் ராம்பிரகாஷ் ராயப்பா. இன்னும் நல்லா அடிங்க சிபி. நீங்க அடிக்கிற அடியில் அவர் நிஜமாகவே போய் தூர விழணும் என்று கேட்க, அதற்கப்புறம் தாமதிக்கவில்லை சிபி. ஓங்கி ஒரே எத்து. சுவர் ஓரமாக போய் விழுந்தாராம் ஜீவா. அதற்கப்புறம் சமாளித்து எழுந்து வந்தவர், வந்த வேகத்தில் சிபிராஜின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட, யூனிட்டே திகைப்பில் ஆழ்ந்ததாம்.

சீன்ல இப்படியெல்லாம் இல்லையே என்று குழம்பிப் போன ராம்பிரகாஷ் ராயப்பா, இருவரையும் கவலையோடு பார்க்க, அன்று போடப்பட்டதாம் நட்புக்கு முழுக்கு. இருவரும் இன்று வரை பேசிக் கொள்வதில்லையாம். இந்த அறை நிஜமாகவே ஷுட்டிங் ஸ்பாட்டில் தேவையான பைட்டுக்காக விழுந்ததா? அல்லது ஷுட்டிங்குக்கு வெளியே நடந்த வேறு ஏதேனும் பிரச்சனைக்காக விழுந்ததா? அறை கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
வாயாலேயே வடை சுடணும்! வர்றீங்களா மா.பா.கா?

ஒருவரின் இடத்தை இன்னொருவரை வச்சு நிரப்பறது ரொம்ப ரொம்ப கஷ்டம்! ஆனால் சிவகார்த்திகேயன் விஷயத்தில் அந்த கஷ்டத்துலேயும் ஒரு சுலபம் கிடைத்தது. அவர்தான் மா.கா.பா.ஆனந்த். பேச்சு, கிண்டல்,...

Close