ரைட்ஸ் விவகாரத்தில் அடாவடி? மண்ணை கவ்விய கார்த்திக் சுப்புராஜ்!

‘ஜிகிர்தண்டா’ ரீமேக் ரைட்ஸ் விவகாரத்தில் அப்படத்தின் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் மீது புகார் கொடுத்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அந்த ரைட்சை தனக்கு தெரியாமலே விற்றுவிட்டார் என்றும், அந்த பணத்தில் நாற்பது சதவீதம் தனக்கு வரவேண்டும் என்பதுதான் கம்ளைன்ட்!

அண்டா போனது தெரியாதாம். குண்டான் நசுங்குனதுக்கு குய்யோ முய்யோன்னா எப்படி? பொங்கி எழுந்துவிட்டார் தயாரிப்பாளர் கதிரேசன். பழைய கணக்கு வழக்குகளையும் அக்ரிமென்ட் பிரதியையும் தயாரிப்பாளர் சங்கத்தின் டேபிளில் போட்டிருக்கிறார். ஜிகர்தண்டா படத்தை ஒப்புக் கொள்ளும்போது எண்பது நாளில் ஷுட்டிங்கை முடித்துவிடுவதாக ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் படத்தை எண்பது நாளுக்குள் முடிக்காமல் இழுத்தடித்துவிட்டாராம். இதில் சுமார் இரண்டு கோடி ரூபாய் கதிரேசனுக்கு நஷ்டம்.

இதை ஆதாரபூர்வமாக சுட்டிக்காட்டியவர், ‘நான் இந்த படத்தின் ரைஸ்சை விற்ற வகையில் 25 லட்சம்தான் அவருக்கு கொடுக்கணும். அதை கொடுத்துடுறேன். அவர்ட்ட இருந்து இரண்டு கோடியை நீங்க வாங்கிக் கொடுங்க’ என்று கேட்க, ஆன் த ஸ்பாட்டிலேயே ரெண்டு கிலோ உடல் இளைத்துப் போனாராம் கார்த்திக்! அப்புறம் கெக்கேபிக்கே என்று சமாளித்திருக்கிறார். உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம் என்று இப்போது இந்தி ரைட்சை சுப்புராஜின் நண்பர் ஒருவருக்கே கொடுக்க முன் வந்திருக்கிறார் கதிரேசன். இதனால் இரு தரப்புக்கும் லாபமாம்!

உரிமைக்காக முஷ்டியை தூக்கறதுக்கு முன்னாடி, நம்ம பக்கம் என்ன தப்புன்னு யோசிக்காதவங்களுக்கெல்லாம் கதிரேசன் பாணிதான் கரெக்ட்!

Read previous post:
அவ நடிக்கணும்! அதுக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவேன்!

‘சவுக்காரம்’ என்ற சொல்லையே சம்ஹாரம் ஆக்கிவிட்டது காலம்! இந்த லட்சணத்தில் ‘உருக்காங் கல்’ தெரியுமா உலகத்திற்கு? செங்கல்லை விட கடினமாக, பாறாங்கல்லை விட இலகுவாக இருப்பதுதான் இந்த...

Close