இந்த படத்தின் முதல் ரசிகர் லிங்குசாமிதான்! ஜிகினா டைரக்டர் பெருமிதம்

ஜிகினா திரைப்படத்தின் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி. அவர் தன் படத்தை பற்றி கூறும்போது, ‘இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோடு , உடனடியாக படத்தை தொடங்கவும் செய்த என் நண்பரும் தயாரிப்பாளரும் ஆன திரைக் கடல் அவர்களுக்கு என் மனமார்ந்த்த நன்றி.கதையை விவாதிக்க ஆரம்பித்த உடனே கதாநாயகனாக எங்கள் மனதில் தோன்றிய முதல் பெயர் விஜய் வசந்த் தான்.

படம் பார்த்தவர்கள் எல்லோரும் விஜய் வசந்த்தை மிகவும் பாராட்ட செய்வார்கள். புது முகம் சானியாதாரா மிகவும் துடிப்பானவர்.அவருக்கு மிக சிறந்த எதிர் காலம் இருக்கிறது.இந்தப் படத்தின் மிக முக்கிய அம்சம் என நான் கருதுவது ‘கும்கி’ அஷ்வின், சிங்கம் புலி, மற்றும் ரவி மரியா ஆகியோர். இன்னொரு சிறப்பு அம்சம் இசை என்பேன்.எல்லோரையும் பெரிய அளவுக்கு கவர்ந்து உள்ளது.

என்னுடைய தொழில் நுட்ப சகாக்கள் ஒளிப்பதிவாளர் பாலாஜி ரங்கா, இசை அமைப்பாளர் ஜான் பீட்டர்ஸ், பட தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா ஆகியோர் இந்தப்படத்தின் முதுகு எலும்பு போன்றவர்கள். ‘ஜிகினா; படத்தை வெளி இட முன் வந்த எனது நண்பரும் இயக்குனருமான லிங்குசாமிக்கும் , அவரது சகோதரரும் என் நண்பருமான போஸுக்கும் என் மனமார்ந்த நன்றி.

ஒரு இயக்குனருக்கு வர்த்தக ரீதியான வெற்றி எவ்வளவு அவசியமோ அதே அளவுக்கு சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையும் அவசியம். இந்த படத்தினை முதலில் பார்த்து கை தட்டிய லிங்குசாமி அவர்களே இந்த படத்தின் முதல் ரசிகர் , அந்த வகையில் ‘ஜிகினா’ எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பது நிச்சயம் ‘என்று உறுதிப்படக் கூறினார் ரவி நந்தா பெரியசாமி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அக்கா இங்கதான் இருக்கு, கூடவே அத்தானும் இருக்காரு…! வந்தது மெசெஜ், நொந்தனர் ஹீரோஸ்!

“அழுத கண்ணீர் அத்தனையும் அவரை கழுவி ஊற்றவாவது பயன்பட்டதே...” நிலைமையில்தான் இருக்கிறது கோடம்பாக்கத்தின் கொள்ளை பசங்க மனசு! பார்த்தால் பார்த்த மாத்திரத்திலேயே இழுத்து இம்சித்துவிட்டு போகும் பேரழகி...

Close