ஜில்லா தெலுங்கு ரிலீஸ்! ஹிட்டை தொடர்ந்து அதிகரிக்கப்படும் தியேட்டர்கள்

ஊரே சேர்ந்து ஒண்ணா குலவை போடணும்னா, படத்துல கலவை நல்லாயிருக்கணும்! இதுதான் விஜய் பட பாணி. எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் குறைந்த பட்ச பொழுதுபோக்கு அம்சம் இல்லாமல் அவருடைய படங்கள் எதுவும் வந்ததில்லை. இந்த ஒரு விஷயத்திற்காகவே ‘ஸ்மால் சூப்பர் ஸ்டார் ஸ்டூல்’ போட்டு ஏறி நிற்கிறார் அவரும். தமிழகம் மட்டுமல்ல, ஆந்திராவிலேயும் நம்ம ஸ்டாருக்கு செம கிராக்கி தெரியுமா என்று அவர் இதற்கு முன்பே நிரூபித்திருந்தாலும், கடந்த இரண்டு நாட்களாக அதன் வேகம் கூடியிருப்பதாக கூவுகிறது தெலுங்கு பட்சி. என்னவாம்?

தமிழில் வெளியான ஜில்லா படத்தை ஆந்திராவில் அதே பெயரோடு ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கில் பேசுவார் விஜய். பிரம்மானந்தம் நடிக்கும் போர்ஷனை சற்று அதிகமாகவே சேர்த்திருப்பதாலும், படத்தில் பங்கு பெற்ற அத்தனை பேரும் தெலுங்குக்கு பரிச்சயமான முகங்கள் என்பதாலும், ஆந்திராவிலும் இந்த படம் ஹிட் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள். ‘படம் ரிலீசாகிற நேரத்தில் நீங்க இங்க இருக்கணும்’ என்று படத்தின் இயக்குனர் ஆர்.டி.நேசனுக்கு அழைப்பு வந்ததாம். நம்…..ம்பி போனவருக்கு முகம் கொள்ளாத சந்தோஷம். கடந்த இரண்டு நாட்களாகவே ஒவ்வொரு தியேட்டருக்கும் விசிட் அடித்து ஏராளமான மகிழ்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார் அவர்.

தெலுங்கில் வரும் அத்தனை இணையதளங்களும் நல்ல மார்க் கொடுத்து வருவதாலும், கலெக்ஷன் ரேட் கை கொள்ளாமல் இருப்பதாலும், அடுத்த வாரத்தில் இன்னும் ஐம்பது தியேட்டர்களை அதிகப்படுத்தும் முடிவிலிருக்கிறதாம் தயாரிப்பு நிறுவனம்.

ஆந்திராவிலிருந்தபடியே விஜய்க்கு இந்த செய்தியை அப்டேட் செய்து வருகிறாராம் அவரும். சென்னை வந்தால் ஆர்.டி.நேசனுக்கு ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு. ஒருவேளை விஜய்யே மீண்டும் கால்ஷீட் கொடுப்பாரோ என்னவோ?

Read previous post:
தேடிச்சென்ற அஜீத்! இதென்ன புதுசா இருக்கு?

அஜீத் எந்த டைரக்டரையும் தேடிப் போனதில்லை. அவரிடம் கதை சொல்வதற்காகதான் காத்திருக்கிறார்கள் பலரும். பில்லா, மங்காத்தா வெற்றிகளுக்கு பின்தான் இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறாரா என்றால் அதுதான் இல்லை....

Close