ஜோக்கர் நாயகிக்கு அடித்தது அதிர்ஷ்டம்! பாலசந்தர் மாணவரிடம் பாடம்!

இந்தியா முழுக்க தேடிக் கொண்டு வந்திருந்தாலும், இதைவிட பொருத்தமான ஒரு முகம் கிடைத்திருக்காது என்று ஆணானப்பட்ட சிவகுமாரிடமே பாராட்டுகளை அள்ளிக் கொண்டவர் ரம்யா பாண்டியன். முதல் படத்திலேயே “நடிகைடா…” என்று அசர வைத்த ரம்யா பாண்டியன், ‘ஜோக்கர்’ பட நாயகி என்பதை சொல்லியா தெரிய வேண்டும்?

ஜிகினா நடிகைகள் தெருவுக்கு நாலு பேர் கிடைப்பார்கள். ஷோபா மாதிரி யாராவது ஒருவர்தான் பிறப்பார்கள். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திய ரம்யா பாண்டியனை தனது ‘ஆண் தேவதை’ படத்தில் ஹீரோயினாக்கியிருக்கிறார் தாமிரா. இவர் இயக்குனர் சிகரம் பாலசந்தரின் மாணவர். இதற்கு முன் ‘ரெட்டச்சுழி’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர். இவரது அடுத்தப்படம்தான் ‘ஆண் தேவதை’. நகரமயமாக்கலில் சிக்குண்டு கிடக்கும் குடும்பத்தை பற்றிய கதை இது.

தமிழ்சினிமாவில் மட்டுமல்ல, மலையாளத்தில் வெளிவரும் நல்ல படங்களிலும் அழுத்தமான ஆக்டிங் கொடுத்துவரும் சமுத்திரக்கனிதான் அந்த ஆண் தேவதை! இமேஜ் விஷயத்தில் ஒரு போட்டி வைத்தால், எம்.ஜி.ஆருக்கு பிறகு நல்லவர் என்ற மார்க்கை நூற்றுக்கு நூறு வாங்குகிற அளவுக்கு மக்களின் மனசை தேற்றி வைத்திருக்கும் சமுத்திரக்கனிக்கு, இந்தப்படத்திலும் அப்படியொரு கேரக்டர்தானாம்.

ஜிப்ரான், விஜய்மில்டன், காசிவிஸ்வநாதன் என்று பலே கூட்டணியுடன் பரீட்சைக்கு தயாராகியிருக்கும் தாமிராவுக்கு பாலசந்தரின் ஆசியும் இந்நேரம் கிடைத்திருக்கும்!

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
pagiri movie review.

https://www.youtube.com/watch?v=PdZ3YhOZSRQ&feature=youtu.be  

Close