ஜோதிகா வீட்டுக்கு மாறிய ரெங்கநாதன் தெரு! பிய்த்துக் கொண்டு கொட்டிய பீஸ்!
ரெங்கநாதன் தெருவிலிருக்கும் அத்தனை வியாபார ஸ்தலங்களின் ஒரு நாள் கலெக்ஷனையும் பிடுங்கினால், தமிழ்நாட்டில் ஒரு மாத பட்ஜெட் செலவை ஈடுகட்டலாம். சுண்டைக்காய் சோன்பப்டியில் ஆரம்பித்து, தங்கம், பிளாட்டினம், வைரம், பட்டு என்று ஜொலி ஜொலிக்கும் ஏரியா அது. வருடந்தோறும் இங்கிருக்கும் முதலாளிகள், முன்னணி நடிகைளை மீன் வலைக்குள் பிடிப்பார்கள். அவரவர் மார்க்கெட் ரேஞ்சுக்கு ஏற்ப சம்பளத்தை கொட்டிக் கொடுப்பார்கள். மூன்று நாள் ஷுட்டிங்குக்கு ஒரு முழு படத்தின் சம்பளத்தை சுளையாக வாங்கிக் கொள்ளும் நடிகைகள், “அடுத்த தீவாளி பொங்கலுக்கு என்னை மறந்துராதீங்க” என்றபடியே அன்னநடை கட்டுவார்கள்.
எல்லாம் போகட்டும்… இன்னமும் பெண்களின் நெஞ்சங்களில் எங்க வீட்டு ராசாத்தியாக குடியிருக்கும் ஜோதிகாவுக்கும் அப்படியொரு அழைப்பு. முன்னணி நகைக்கடை ஒன்று அவரை அணுகி இந்த விளம்பரத்தில் நடிக்க வைத்திருக்கிறது. இதற்காக மூன்று நாட்கள் கால்ஷீட் கொடுத்த ஜோதிகா, அதற்காக போட்டுக் கொடுத்த பில் சுமார் இரண்டு கோடி என்கிறது மார்க்கெட் வட்டாரம். இன்று முன்னணியில் இருக்கும் அத்தனை நடிகைகளையும் ஆவென்று வாயை பிளக்க வைத்திருக்கிறது இந்த சம்பளம்.
சும்மாயில்லங்க… அதுதான் ஜோதிகா இத்தனை வருஷங்களாக கட்டி காத்து வைத்திருந்த இமேஜ்! அவரது எங்க வீட்டுப் பெண் இமேஜுக்கு இன்னும் கூட கொட்டிக் கொடுக்க தயாராக இருக்கின்றன பல நிறுவனங்கள். இந்த விளம்பரத்தை தொடர்ந்து எனக்கு உனக்கு என பலரும் ஜோதிகா வீட்டு கதவை தட்ட, அங்குதான் வைக்கப்பட்டிருக்கிறது புல்ஸ்டாப்.
யெஸ்… இன்னும் இரண்டு வருஷத்துக்கு வேறெந்த விளம்பர படங்களிலும் நடிக்க மாட்டேன் என்று அக்ரிமென்ட்டில் சைன் பண்ணியிருக்கிறாராம் அவர்!