ரொம்ப நாள் கழிச்சு ஜப்பான்ல தமிழ்ப்படம்
‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்ற படத்தின் மூலம் ஜப்பானுக்கு ரூட் போட்டுக் கொடுத்தவர் கமல். ஆனால், கமல் போட்டுக் கொடுத்த ரூட்டில் இப்போது ரஜினி பஸ்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ரஜினியின் ‘முத்து’ திரைப்படம், ஜப்பானில் பல நாட்கள் ஓடியதாக கூறிவருகிறார்கள் அவரது ரசிகர்கள். இத்தகையை நல்ல சூழலில்தான் மீண்டும் ஜப்பானை குறி வைத்திருக்கிறது தமிழ்சினிமா ஒன்று.
ஆ என்ற ஆவியுலக திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரீஷ் இரட்டை இயக்குனர்கள் அடுத்து இயக்கவிருக்கும் படம் ஜம்போ 3D. ஜப்பானில் ஜம்புலிங்கம்தான் -ஜம்போ 3D என்றாகியிருக்கிறது. ஆ திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த கோகுல்நாத் தான் இப்படத்திலும் ஹீரோ. இவர் Mime-slapstick எனும் நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறாராம். இவருடன் சுகன்யா , பேபி ஹம்சிகா , அஞ்சனா , லொள்ளுசபா ஜீவா , ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் ‘கும்கி’ அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர் . நாற்பது நாட்கள் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது இந்த படம். ஆச்சர்யம் என்னவென்றால் இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஜப்பான் குடியுரிமை பெற்றவர்தானாம்.
படத்தின் தயாரிப்பாளர் G ஹரி குறிப்பிடுகையில் , ” நல்ல குடும்பத்திரைபடமாக அமைந்துள்ள இப்படம் குழந்தைகளை கவரும் . இந்திய-ஜப்பானிய கலாச்சாரத்தை பறைசாற்றக்குடிய வகையில் படமாக்கபட்டுள்ளது. ஜப்பானியர்கள் நடித்துள்ளதால் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளோம் ” என்றார் .
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு பதிலாக நடித்தவர் லொள்ளு சபா ஜீவா என்றொரு செய்தி வந்ததல்லவா? இப்போது இந்த படத்தில் ‘எந்திரன்’ ரஜினியாகவும் நடிக்கப் போகிறார் ஜீவா. அதற்காக இவரையும் ஜப்பானுக்கு தள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள். பொதுவாகவே ‘ஜப்பானில் கல்யாண ராமனல்ல, ரஜினிராமன்’ என்கிற அளவுக்கு புகழ்பெற்று விளங்கும் ரஜினியின் தோற்றத்தில் வேறொருவர் அங்கு திரிந்து கொண்டிருந்தால் என்னாகுமோ?
பார்த்து பத்திரமா வந்து சேருங்க ஜீவா.
LONG LIVE OUR UNIVERSAL SUPER STAR RAJINI