அட… நம்ம ராசேந்திரன்!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காலகட்டம் வரும். வருங்காலம் ராசேந்திரனுக்கான காலகட்டமாக இருந்தால் கூட ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அப்படியொரு கொடூரமான முகத்தை வைத்துக் கொண்டு வில்லனாகதானே நடிக்க முடியும்? ஆனால் ராசேந்திரனை பார்த்தாலே கெக்கேபிக்கே ஆகிறது தியேட்டர். ஏன்? அதற்கு காரணம் இவரையும் காமெடியனாக்க முடியும் என்று நம்பிய ராஜேஷ் எம் டைரக்டரால்தான்.

‘நான் கடவுள்’ படத்தில் பூஜாவை அப்படியே சுவரோடு சுவராக வைத்து தேய்த்து ஒரு பக்கத்து முகத்தை அலங்கோலமாக்குகிற அந்த காட்சியில், ‘அட நீ நாசமாதாண்டா போவ’ என்று ராசேந்திரனை சபித்தது தமிழ்நாடு. அவ்வளவு மோசமான முகத்திற்கு பின்னாலும் காமெடி ஒளிந்திருப்பதை கண்டு பிடித்தார் ராஜேஷ். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில்தான் ராஜேந்திரனின் இமேஜை அப்படியே மாற்றினார் அவர். அதற்கப்புறம் ராஜா ராணி படத்தில் அதற்கு மெருகூட்டினார் அட்லீ. அப்புறம் ராஜேந்திரன் வந்தாலே சிரிக்கிற அளவுக்கு ஆக்கியது திருடன் போலீஸ்.

இப்போது நீங்கள் அருகில் பார்த்துக் கொண்டிருக்கும் ராஜேந்திரனின் கெட்டப், காலகட்டம் படத்தினுடையது. காஸ்ட்யூம் உதவியாளராக வாழ்க்கையை துவங்கி குரூப் டான்சராக வளர்ந்து இப்போது இயக்குனராக பிரமோஷன் ஆகியிருக்கும் பாஸ்கர் என்பவரது படம்தான் இந்த காலகட்டம். பவன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சத்யஸ்ரீ.

சில தினங்களுக்கு முன் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. முன்னணி நட்சத்திரங்களோ, இயக்குனர்களோ, வாழ்த்த வரவில்லை. ஆனால் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கும் கானா பாலா வந்திருந்தார். இப்பல்லாம் எந்த படம் ஓடும்னு தெரியல. ஓடும்னு நினைக்கிற படம்னா மட்டும் நிறைய விஐபிங்க வர்றாங்க. இது மாதிரி அறிமுக டைரக்டர் படத்துக்கு வர மாட்டேங்கிறாங்க. ஒருவேளை இந்த நிகழ்ச்சிக்கு நான் வராமல் போய், நாளைக்கு இந்த படம் நல்லா ஓடுச்சுன்னா அவங்க முகத்தை எப்படி நேருக்கு நேர் பார்க்க முடியும்? அதுக்காகதான் வந்தேன். இந்த படம் நல்லா ஓடும் என்றார்.

இருந்தாலும் விழாவுக்கு ராசேந்திரன் வராதது பலருக்கும் வருத்தம்தான்!

Read previous post:
அந்த விஷயத்தில் நயன்தாராவும் கவுண்டமணியும் ஒண்ணு!

‘அதார்றா... தேங்கா மண்டையன் என்னய போய அந்த புள்ளக் கூட கம்பேரு பண்ணுறது?’ என்று கவுண்டர் குரல் காதில் ஒலிக்க ஒலிக்க இந்த செய்தியை படித்துவிடுங்கள். ஏனென்றால்...

Close