கடும் போட்டி! கபாலியை கைப்பற்றிய ஜெயா டி.வி?
கபாலி ஃபீவருக்கு ஒரே மருந்து அதன் ரிலீஸ் தேதிதான். உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்கள், “எங்க நாட்டில் இந்த தியேட்டர்லதான் கபாலி வரப்போகுது” என்றெல்லாம் அந்த தியேட்டர்களின் புகைப்படங்களை பேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் வெளியிட்டு மகிழ்கிறார்கள். அந்த காலி தியேட்டருக்கே இவ்வளவு மரியாதை என்றால்? கபாலி ரிலீசுக்குப் பிறகு அந்த தியேட்டர்களின் பெருமையை நினைத்துப் பாருங்கள்… ஹரே ராமா..!
இந்த பரபரப்புக்கு சற்றும் சளைக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கபாலி படத்தின் வியாபாரம். ரஜினியை ரஜினிதான் முந்த வேண்டும் என்று சட்டம் போட்டதை போலதான் நடக்கிறது அதன் வியாபாரம். எப்.எம்.எஸ் என்று சொல்லப்படும் வெளிநாட்டு வியாபாரமும் சரி, தெலுங்கு ரைட்ஸ்சும் சரி. இதற்கு முன் ரஜினி படங்கள் சந்திக்காத ரேட் என்கிறார்கள் இன்டஸ்ரியில். இப்போது அதையும் தாண்டி இன்னொரு செய்தி.
கபாலியின் டி.வி. சேனல் உரிமம் வாங்குவதற்கு இரண்டு சேனல்களுக்கு இடையே பெரும் போட்டி நடந்ததாம். கிட்டதட்ட அறிவிக்கப்படாத ஏலம் நடந்த அந்த பேரத்தில் ஜெயா டிவிக்கே வெற்றி கிடைத்திருக்கிறது. தயாரிப்பாளர் தாணு தன் ஒவ்வொரு ஸ்டெப்பையும் மிக சரியாக வைக்கிறார் என்பதற்கு இதைவிட வேறென்ன ஆதாரம் வேண்டும்?
இந்த சந்தோஷங்கள் ஒருபுறம் இருக்க, ஜுலை 3 ந் தேதி ரஜினி சென்னை வந்திறங்குகிறார் என்ற தகவலும் அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஜெய் ராகவேந்திராய நமஹ….