கபாலி படத்தின் விநியோக உரிமை: கோவையை வளைத்த பெப்சி சிவா
இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி படத்தின் மூலம் விநியோகஸ்தர் ஆகியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. ஆரம்பத்தில் மெல்லமாக துவங்கிய கபாலி ஃபீவர், இப்போது எத்தனை மாத்திரை போட்டாலும் தீராத கட்டத்திலிருக்கிறது. படத்தை வாங்குவதற்கு நான் நீ என்கிற போட்டி ரஜினியின் முந்தைய படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு இருக்கிறது.
இருந்தாலும் திருப்பூர் சுப்ரமணியன் போன்ற முக்கியமான விநியோகஸ்தர்கள் ஒதுங்கிக் கொண்டது விவாதத்திற்குள்ளாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத விதமாக உள்ளே வந்த பெப்சி சிவா, கபாலி படத்தை சுமார் 13 கோடி ரூபாய் கொடுத்து கோவை ஏரியாவை வாங்கியிருக்கிறாராம்.
கபாலி மீது இவரைப்போன்ற முக்கியமான சினிமா வி.ஐ.பிகள் அக்கறையும் ஆர்வமும் கொண்டிருப்பது திரையுலகத்தில் ஒருவித சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.