முதுகு வலிக்க புத்தகப் பை… முறையான கேள்வி கேட்கும் படம்!

பிள்ளைகளின் முதுகை ஒடிக்கும் பள்ளி நிர்வாகங்கள் அவசியம் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் ‘காதலை தவிர வேறொன்றுமில்லை’. கொஞ்சம் காதலும் நிறைய காமெடியுமாக படம் எடுக்கிற செல்வபாரதி, இந்த முறை என்ன கலவையில் படம் எடுத்திருக்கிறாரோ, அது வெளிவந்தால்தான் தெரியும். ஆனால் விவாதிக்கவும், வில்லங்கமாக யோசிக்கவும் நிறைய விஷயங்கள் படத்தில் இருப்பதாக படுகிறது. அதுவும் படத்தில் ஒரு மாணவன் பேசுவதைப்போல ஒரு டயலாக், கண்டிப்பாக கவன ஈர்ப்பு தீர்மானமே அன்றி வேறில்லை.

புத்தக மூட்டையை சுமக்க முடியாம கஷ்டப்படுறோம்னு சார்ட்ட ஒரு ஐடியா சொன்னேன். போய் ஹெட் மாஸ்டர்ட்ட சொல்லுடான்னாரு. நான் போய், ‘சார்… ஸ்கூல்ல புக் கொடுக்கும் போதே ரெண்டு செட்டா கொடுத்திட்டீங்கன்னா, ஒரு செட்டை வீட்ல வச்சுருப்போம். இன்னொரு செட்டை ஸ்கூல்ல வச்சிருந்து படிச்சுப்போம். முதுகு வலிக்க சுமக்க வேணாமே சார்’னு சொன்னேன். பெரிய புத்திசாலி… ஐடியா கொடுக்க வந்துட்டாரு. நீ என்னைவிட புத்திசாலியாடான்னு கேட்டு அடிக்கிறாரு… இதுதான் அந்த டயலாக். அட நல்லாதானே இருக்கு என்று எல்லாரையும் யோசிக்க வைக்கிற ஐடியா. இப்படி படம் நெடுக குழந்தைகளை வைத்து பேசுகிறாராம் செல்வபாரதி.

அப்படியே இன்னொரு கண்டிப்பு. அந்த மாணவன் தன் ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு அங்கு உட்கார்ந்து நியாயம் பேசுகிறவனாக காட்டப்படுகிறான். அந்த கத்தி குத்துக்கும் அவர் நியாயம் கற்பிப்பதை போல இருக்கிறது சில டயலாக்குகள். இதற்கெல்லாம் படத்தில் அவர் என்ன பதில் வைத்திருக்கிறாரோ? போகட்டும்…. வெகு காலம் கழித்து நாம் பார்க்கும் பிளசன்ட்டான முகமாக சரண்யா மோகனின் என்ட்ரி இருக்கிறது காதலை தவிர வேறில்லை படத்தில். இவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாட்டை ஹீரோ யுவன்.

சரண்யா மோகன் மாதிரி நல்ல ஹீரோயினை நான் பார்த்ததேயில்ல. ஒரு நாள் கூட அவங்க கேரவேன் கேட்டதில்ல. நானும் கொடுத்ததில்ல என்றார் செல்வபாரதி. தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்கணும்னு நினைக்கிறேன். அதுக்கு இந்த படம் ஹெல்ப் பண்ணும்னு நம்புறேன் என்றார் சரண்யா. படத்தின் ஹீரோ யுவன், இவரை சீனியர் சீனியர் என்று அழைக்க, சரண்யா முகத்தில் வந்த சந்தோஷத்தை பார்க்கணுமே!

ரெண்டு வருஷம் முன்னாடி நடிக்க வந்தா கூட சீனியர் சீனியர்தான் போலிருக்கு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முதல்பட தயாரிப்பாளர், இயக்குனர், ஹீரோ… எவருக்கும் கல்யாண அழைப்பில்லை! அமலாபால் அதிரடி!

முதலில் அமலாபால்-விஜய் இளம் தம்பதிகளுக்கு நமது நியூதமிழ்சினிமா.காம் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. அப்படியே புருஷன் வீட்டில் வாழப்போகும் பொண்ணே... தங்கச்சி கண்ணே... ஸ்டைலில் ஒரு அட்வைஸ்....

Close