“காதலுக்கு கண்ணில்லை”
ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ஜெய் ஆகாஷ் இயக்கத்தில் உண்மை கதை “காதலுக்கு கண்ணில்லை “எனும் புதிய திரைப்படத்தை தயாரித்து , திரையிட தயார் நிலையில் உள்ளது இப்படத்தின் கதாநாயகனாக ஜெய்ஆகாஷ் மாறுபட்ட இரு வேடங்களில் அப்பா ,மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக அலிஷா தாஸ் மற்றும் நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் Y.இந்து ,லலித்யா ,பிரபாகரன் ,மதனன் ,ராம்பாபு ,வசந்தகுமார், ஜெய் ஸ்ரீ ரம்பா ,சாந்தி ,ஸ்ரீ காந்த் ,மாஸ்டர் யோகி , சுவிஸ் ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.
கதைச்சுருக்கம்: : 17 வயது முதல் 45 வயது வரை வாழ்கையில் போராடும் ஒரு பெண்ணின் பிரதிபலிப்பு தான் இந்த உண்மை கதை .காதல் வயப்பட்டு கெட்டவன் ஒருவனுக்கு வாழ்க்கைப்படும் ஒருத்தி அவனால் சீரழிக்கப்படுகிறாள் .கெட்டவன் கொடுத்த பரிசாக மூன்று ஆண் பிள்ளையை ஈன்றெடுத்த அவள் பிள்ளையால் மேன்மை அடைகிறாளா ?அல்லது சீரழித்தவன் பழிவாங்கபடுகிறானா?என்பது கரு.இப்படம் பெண்ணை மையமாக வைத்து பெண்ணுக்கு முன்னுரிமை கொடுக்கும் விழிப்புணர்ச்சி உண்மை சம்பவம் .
இப்படம் முழுவதும் ECR,சென்னை அதன் சுற்றுப்புறங்கள் , மகாபலிபுரம் ,ஹைதராபாத் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர்கள் ரினில் கௌதம், UK முரளி, இசையில் 4 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை SP பாலசுப்ரமணியம் ,பிரசன்னா , ஹாரிஸ் ராகவேந்திரா, கானா பிரபா ஆகியோர் பாடியுள்ளனர்.
அக்டோபர் மாதம் 2014 ல் திரைக்கு வருகிறது.
திரைக்கதை – இயக்கம் : ஜெய் ஆகாஷ்
கதை – வசனம் : Y . இந்து
ஒளிப்பதிவு : தேவராஜ்
இசை : ரினில் கௌதம் & UK முரளி
பாடல்கள் : திரவியன்
எடிட்டிங் : R .மோகன்
கலை : A.மோசஸ்
மக்கள் தொடர்பு : S.செல்வரகு
தயாரிப்பாளர்கள்: N.J சதீஷ் , Y. முரளிதரன்