காஜல் அகர்வாலும் பானிப்பூரி விக்கிறவங்களும் ஒண்ணா?
‘பாம்பேயிலேர்ந்து பானி பூரி விற்க வர்றவங்கள்லாம் நாலே மாசத்துல தமிழ் கத்துக்குறாங்க. ஆனா பத்து வருஷமா தமிழ்ல நடிக்கிறீங்க? இன்னும் தமிழ் தெரிய மாட்டேங்குதே?’ இப்படியொரு கேள்வியை காஜல் அகர்வாலை பார்த்து ஒரு நிருபர் கேட்க, பேரதிர்ச்சிக்கு ஆளானார் காஜல்.
‘நானும் பானிப்பூரி விற்பவர்களும் ஒண்ணா?’ என்று சண்டைக்கு நிற்காமல், அதே நேரத்தில் அதிர்ச்சியும் விலகாமல் அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தார். ‘இப்ப தமிழ்ல யார் பேசினாலும் நல்லா புரியும். ஆனால், ரிப்ளை பண்ணுறதுதான் கஷ்டம். சீக்கிரம் தமிழ் கத்துக்குறேன். ஸாரி…’ என்றார்.
பேச்சோடு பேச்சாக ‘சூப்பர் ஸ்டாரோட மருமகனா இருந்தாலும் தனுஷ் சார் எவ்வளவு எளிமை’ என்றும் வியந்தார். ‘பொதுவாகவே நான் யாருடைய பெயரை சொல்லியும் பேர் வாங்கணும்னு நினைக்க மாட்டேன். என் திறமைதான் எனக்கு பெருமை’ என்று சொல்லி வரும் தனுஷுக்கு, காஜலின் பாராட்டு நிச்சயம் கமர்கட்டாக இருக்கப் போவதில்லை.