காக்கி தலைப்பு எங்கிட்ட இருக்கு! கவுண்டமணி டைரக்டர் பிடிவாதம்!

விஜய் நடிக்கும் அட்லீ படத்திற்கு என்ன தலைப்பு? பருப்பு விலையை விட படா படா டிஸ்கஷன் இது குறித்துதான்…. முதலில் மூன்று முகம் என்று வைக்க நினைத்தார்கள். அது சத்யா மூவிஸ் படம் என்பதால் சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் துண்டை விரிக்க, ஸாரி… என்று கூறிவிட்டது அந்த நிறுவனம். அதே படத்தை அதே தலைப்போடு ரீமேக் செய்யும் எண்ணம் இருக்கிறதாம் அவர்களுக்கு. அதனால் வந்த ஸாரிதான் இது.

அதற்கப்புறம் என்னென்னவோ பரிசீலனைக்குள்ளானது. கட்ட கடைசியாக ‘காக்கி’ என்ற முடிவுக்கு வந்தார்கள். அதற்குள் விஷயம் வெளியில் பரவ, காக்கி… காக்கி… என்று கண்ணில் படுகிற கலரையெல்லாம் காக்கி என்றே கொண்டாடியது விஜய் ரசிகர்களின் மனசு. இந்த தலைப்பு விஜய்க்கும் ரொம்ப பிடித்துப் போனதுதான் விசேஷம். இந்த நிலையில் எப்படியாவது காக்கியை கைப்பற்றிவிட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட பெயர் லிஸ்ட்டுகளை பரிசீலித்தால், ஐயகோ… அது வேறொரு டைரக்டரின் வசம் இருக்கிறது.

அவர்? ‘வாய்மை’ என்ற படத்தை இயக்கி வரும் செந்தில்குமார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நால்வரின் கதையை மையமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் படம்தான் ‘வாய்மை’. இதில் முக்கிய ரோலில் நடிக்கிறார் கவுண்டமணி. தனது முதல் படத்தையே செம சிக்கலான ஒரு புள்ளியில் ஆரம்பித்திருக்கும் செந்தில், பேசிக்கலாகவே பிரச்சனையை விரும்புகிறவர் போலதான் தெரிகிறார். “காக்கியை கொடுங்க தம்பி” என்றால், “இந்தாங்கண்ணே” என்று கொடுத்துவிடவா போகிறார்?

பரபரப்பு கோயிங்…

Read previous post:
Retired Justice Sri..E.Padmanabhan issued Certificate To Paandavar Ani Team

Close