சுத்துபட்டெல்லாம் அலைஞ்சு சேத்துப்பட்டுல கண்டுபிடிச்சோம்!

அப்பளக் கம்பெனிக்காரர் படமெடுக்க வந்தால், ச்சும்மா பொரிச்சு எடுத்துற மாட்டாங்களா? நல்லவேளை… இவர் புதிய ஆட்களிடம் சிக்கவில்லை! தனது அருள் அப்பள நிறுவனத்திற்கு விளம்பர படங்களை எடுத்துவரும் ராபர்ட் ராஜிடம், ‘நான் ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன்’ என்றாராம் பி.கே.சந்திரன். இவ்வளவு வருஷமா நாம்தான் விளம்பர படம் எடுத்து தர்றோம். எங்கிட்ட ஒரு கதை கேட்டிருக்கலாமே என்று ராபர்ட் ராஜ் மனசுக்குள் நினைத்து முடித்த வினாடியில், ‘அதுக்கு நீங்கதான் டைரக்டர்’ என்று அவர் உயிர் மூச்சை அதிர வைக்க, அப்படியான ஒரு சுபயோக சுப தினத்தில்தான் இயக்குனர் ஆகிவிட்டார் ராபர்ட்ராஜ். படத்தின் பெயர் களம். ‘வெண்ணிலா கபடி குழு’ ஸ்ரீநிவாசன் , ‘சுட்ட கதை’ நாயகி லக்ஷ்மி பிரியா, ‘கோலி சோடா’ மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத் மற்றும் கனி நடித்துள்ளனர்.

ஆனால் அதிலும் ஒரு திருப்பம். பி.கே.சந்திரனின் மகன் சுபிஷே ஒரு கதையை இவரிடம் சொல்ல, ‘அதுவே நல்லாயிருக்கு சார்.’ எடுத்துடலாம் என்றார் ராபர்ட். இந்த சுபிஷ் அடிப்படையில் நல்ல பாடகரும் கூட. மலையாளத்தில் மோகன்லால் மம்முட்டி படங்களில் பாடியும் இருக்கிறாராம்.

கதை என்ன? அடாவடி பேர்வழியான ஒருவரின் மகன், அப்பாவின் நடவடிக்கை பிடிக்காமல் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுகிறான். அப்புறம் எப்படியோ அம்மாவின் வற்புறுத்தலால் ஊருக்கு திரும்புகிறான். அம்மாவும் மகனும் தன்னுடன் இருப்பதை பிடிக்காத அப்பா, ஒரு ஜமின்தாரின் பழைய பழைய வீட்டை இவர்களுக்கு தருகிறார். போனால்? அங்குதான் ட்விஸ்ட். ஏதேதோ வினோதமான பிரச்சனைகள் இவர்களை டார்ச்சர் செய்கிறது. அது என்ன என்பதும், அவர்கள் என்னாவானார்கள் என்பதும்தான் கதை. குறிப்பிட்ட அந்த பங்களாவை தேடி அலையாத அலைச்சல் இல்ல. கடைசியில் சென்னை சேத்துப்பட்டில் இருந்தது அந்த பங்களா. ஆர்ட் டைரக்டர் கை பட்டவுடன் அந்த பங்களா இன்னும் பயங்கரமாயிருச்சு என்றார் ராபர்ட் ராஜ்.

இப்பல்லாம் பேய் ஆவி பில்லி சூனியங்கள்தான் ட்ரென்ட். இந்த படமும் அப்படிதானா என்று கேட்டால், ‘அதை எப்படி இப்பவே சொல்ல முடியும்? படத்தை பாருங்க தெரியும்’ என்றார். இவ்வளவு க்ளீனா கதையை சொல்லிட்டாங்க. அப்புறமும் இது பேய் பிசாசு வகை படமில்லேன்னா எப்படி? ஒருவேளை அதையும் தாண்டி வேறு எதையோ வச்சுருக்காங்களோ என்னவோ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
விஞ்ஞானி- விமர்சனம்

அற்புதமான பொக்கிசத்தையெல்லாம் தொலைச்சுட்டு, நாக்காலே இன்னும் ‘நக்கிஸம்’ பேசிக் கொண்டிருக்கும் நமக்கான படம்தான் விஞ்ஞானி. மூவாயிரம் வருஷத்துக்கு முன்னாடியே தமிழ்நாட்ல தண்ணீர் பஞ்சம் வரும். தஞ்சை வயல்களெல்லாம்...

Close