பார்வை அற்றவராக நடிக்கிறார் கமல்! பேச்சு வார்த்தைகள் விறுவிறு…
கமல் மாதிரியான கலைஞர்கள்தான் இந்த சமூகத்தின் பெருமை என்று நாம் நம்புகிறோமோ, இல்லையோ? கேரளா நம்புகிறது. அவருக்கு செவாலியே விருது கிடைத்த அடுத்த சில நிமிஷங்களில் குவிந்த ஓராயிரம் விஐபி வாழ்த்துகளில், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து வந்த வாழ்த்துக்கள் மட்டும் பாதிக்கும் மேல் இருக்கும்! இவரும் சும்மாயில்லாமல் என் முதல்வர் என்று கேரள முதல்வரை விளிக்க, ஊரெங்கும் ஒரே குமுறல்ஸ்.
கமலுக்கு இது போன்ற குமுறல்கள் புதுசல்லவே? தன் சொந்த வேலையை பார்ப்பதில் முனைப்பாகிவிட்டார்.
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஒப்பம்’. செய்யாத தவறுக்காக கொலைப் பழிக்கு ஆளாகிறார் கண் பார்வையற்ற ஒரு லிப்ட் ஆபரேட்டர். தன் மீது படிந்த கறையை போக்க வேண்டும் என்றால் நிஜ குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டும். எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையாக அமைத்திருக்கிறார்கள் அப்படத்தில். நிஜ கொலையாளியாக சமுத்திரக்கனியும், கண் பார்வையற்ற லிப்ட் ஆபரேட்டராக மோகன் லாலும் நடித்த அந்தப்படம் கேரளாவில் செம ஹிட்.
ஒப்பம் படத்தின் ரீமேக் உரிமையை முறைப்படி வாங்கியிருக்கிறாராம் கமல். அந்த பார்வைற்றவர் வேடத்தில் நடிக்கப் போகிறவரும் கமல்தான்.
ராஜபார்வை கமலுக்கும் இந்தப்பட கமலுக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசம் அல்ல, அறுபது வித்தியாசங்கள் இருந்தால் கூட அதில் ஆச்சர்யமில்லை!
To listen audio click below :-