கவுதமுடன் கமல்? ரீமேக் ஆகிறது சீவலப்பேரி பாண்டி!
நிஜக்கதைகளை குழைத்து அடிக்கிற போதெல்லாம் தமிழ்சினிமாவுக்கு நல்ல நேரம் வந்துருச்சு என்று சொல்கிற அளவுக்கு இருக்கும் கலெக்ஷன். அதுவும் கமல் மாதிரி ஜனங்களின் கொள்ளையர்கள், ‘நாயகன்’ மாதிரியான கதையில் நடிக்கும் போது அதன் லெவலே வேற…! பல வருஷங்களுக்கு முன் நெப்போலியன் நடித்த ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தை மீண்டும் தூசு தட்டி எடுத்தால் என்ன என்கிற எண்ணம் கவுதம்மேனனுக்கும், கமல்ஹாசனுக்கும் வந்தால் என்னாவது? ஒரு தெறி ஹிட்டுக்கு தயாராவதை தவிர வேறு வழியில்லை.
ஸ்டைலிஷ்ஷான சிட்டிக் கதைகளை எடுக்கும் கவுதம் மேனன், முதன் முறையாக வில்லேஜ் கதைக்குள் என்ட்ரியாவதும், அதுவும் ராபின்ஹுட் மாதிரியான வாழ்க்கை வாழ்ந்த ஒரு போலீஸ் என்கவுட்டர் ஆசாமியின் கதையை படமாக்குவதும் கூட பலரது எதிர்பார்ப்பை கிளறிவிடக் கூடியதுதான். ஜுனியர் விகடன் இதழில் சீவலப்பேரி பாண்டி கதையை எழுதிய சௌபாதான் இந்த படத்திற்கும் வசனம் எழுதப்போகிறாராம்.
இந்த படத்தை ‘சீவலப்பேரி பாண்டி’ படத்தின் ஒரிஜனல் தயாரிப்பாளரே மீண்டும் எடுக்கவிருப்பதாக கூறப்படுகிறது. கெழக்கு செவக்கையில… கீரை அறுக்கையில… பாடலை கமல் தன் ‘உடைந்த தொண்டையால்’ பாடினால் எப்படியிருக்கும்?
அதிருக்கட்டும்… இந்த படத்தில் ஹாரிஸ் ஜெயராஜும் உள்ளே வரப்போவதாக ஒரு தகவல் வருகிறது. கலக்குறீங்களே… கனவான்ஸ்!
Gautham menon and village subject?.Theri hit?.Please come out of your dream boss.