கமலுக்கு ஒரு புது வாத்தியார்…?

ஆர்யா தம்பி நடித்த முதல் படம் படித்துறை. இந்த படத்தை இயக்கியவர் சுகா. அடிப்படையில் மிக சிறந்த எழுத்தாளர் இவர். அது மட்டுமல்ல, பிரபல கவிஞரும் பேச்சாளரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான நெல்லை கண்ணனின் புதல்வர்.

இவர்தான் இப்போது கமலுக்கு டீச்சர்! எதுக்குப்பா எதுக்கு…?

பாபநாசம் படத்தில் நெல்லை தமிழ் பேசி நடிக்கிறார் அல்லவா கமல்? அவருக்கு நெல்லை தமிழை சுருதி சுத்தமாக சொல்லிக் கொடுக்கிற விஷயத்தில்தான் இவர் டீச்சர். இந்த படத்தில் நெல்லை பாஷை பேச வேண்டும் என்று முடிவெடுத்தவுடனேயே கமல் செய்த முதல் வேலை, மிக சிறப்பாக நெல்லை தமிழ் பேசும் அறிஞர்களை வரவழைத்து அந்த பக்குவத்தை கற்றுக் கொள்ள முனைந்ததுதான். யார் யாரோ கமலுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், கமலின் சாய்ஸ் சுகாதான்.

இப்போது பாபநாசத்திலேயே தங்கியிருந்து கமலுக்கு ஒவ்வொரு ஷாட்டுக்கும் உதவி வருகிறார் சுகா. இதற்கிடையில் படத்தில் பங்கு பெற்ற இன்னொருவரை நினைத்து சந்தோஷத்தில் மிதந்தாராம் கமல். அவர்? மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான மோகன்லாலின் மகன். இந்த படத்தில் அவரும் ஒரு உதவி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். இந்த விஷயம் கமலுக்கே தெரியாதாம். திடீரென ஒரு நாள் இவரை அழைத்து, தம்பி… உன் ஊர் பேரென்ன என்று கமல் விசாரிக்க… அவர் சொன்ன தகவல்தான் அது.

ஒசரத்துல பொறந்தாலும், ஒய்யாரமா அறிமுகப்படுத்திக் கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்ற இருந்த பையன் கமலுக்கு ஆச்சர்யம் தராமல் வேறென்ன கொடுத்திருக்க முடியும்!

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    கமல் மட்டும் நெல்லைத் தமிழ் பேசுவாரா இல்ல எல்லா பாத்திரங்களும் பேசுவாங்களா?

    படத்தில அவரு மட்டும் நெல்லைத்தமிழ் பேசினா தமிழ் கூறும் நல்லுலகம் ஆஹா ஓஹோன்னு கொண்டாடிக் கூத்தாடும். ஆனாக்க அவரு மட்டும் அப்படிப் பேசுவது தனித்து லாஜிக் இல்லாமல் துருத்திக் கொண்டு நிற்பதை ப்ரீயா உட்டுரணுமா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
12 மணி நேர படப்பிடிப்பில் முழு படம் “ நடு இரவு “

24 மணி நேரத்தில் பல யூனிட் , பல இடங்களில் படப்பிடிப்பை நடத்தி “ சுயம்வரம் “ என்ற படத்தை தயாரித்து சாதனை படைத்தது தமிழ் திரையுலகம்....

Close