ஓ.பி.எஸ் கமல் ஒரே மேடையில்! பரபரப்புக்கு தயாராகிறது தமிழ்நாடு?

‘இந்துத்வாவின், சந்துத்வாதான் கமல்’ என்று நாட்டிலிருக்கும் கருப்பு சட்டைகள் பலர் சந்தேகத்தை எழுப்ப, தான் யார்? எதற்காக இந்த சசிகலா எதிர்ப்பு? என்பதற்கெல்லாம் ஒரே மேடையில் பதிலளிக்கப் போகிறார் கமல்.

ஜெயலலிதா விண்ணுலகம் போன நாளில் இருந்தே பலருக்கு மூணு வேளையும் பயில்வான் லேகியம் சாப்பிட்ட தெம்பு வந்துவிட்டது. முக்கியமாக தமிழ்சினிமா ஹீரோக்கள் பலர் தங்கள் கருத்தை படீர் திடீரென தெரிவிப்பதெல்லாம் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். சித்தார்த் போன்ற சின்னப்பசங்கள் கூட, “உப்புதானே போட்டு சாப்புடுறீங்க” என்று தமிழகத்தை பார்த்து கேட்கிற அளவுக்கு நிலைமை படு சாதாரணம் ஆகிவிட்டது.

ஆனாலும் இவ்வளவு கூட்டத்திலும் கமல் பேச்சுக்கு மட்டும் கடும் ஆதரவு எழுந்திருக்கிறது மக்கள் மத்தியில். நாலு வரி சொன்னாலும் நறுக்குன்னு சொன்னாருடா என்று பலரும் பாராட்டி வருகிறார்கள். ஏன் கமல் சசிகலாவை எதிர்க்க வேண்டும்? அதற்கு வண்டி வண்டியாக பல காரணங்கள் இருக்கிறது. அதை தனியாக இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்வதுதான் சரியாக இருக்கும்.

இப்போதைய பரபரப்பு என்ன தெரியுமா? ஓ.பி.எஸ்சை வெளிப்படையாக கமல் ஆதரிக்க முடிவெடுத்திருப்பதுதான். அவர் முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை துவங்கி வைக்க அலங்காநல்லூர் கிளம்பியதையும், அங்கிருக்கும் மக்கள் இவர் வருகையை எதிர்த்ததும் மக்கள் அறிந்த விஷயம்தான். அப்போது ஓ.பி.எஸ் சுக்கு என்னாகுமோ என்று தன் கவலையை பகிரங்கமாக வெளிப்படுத்தினார் கமல்.

இப்படி இவரும் ஓ.பி.எஸ்சும் ஒண்ணுக்குள்ள ஒண்ணாகிக் கிடப்பது வெறும் அறிக்கைகளோடு போய்விடுமா என்று நினைத்தவர்களுக்கு அந்த பேரின்பத்தை தரப்போகிறாராம் கமல். எப்படி?

பிப்ரவரி 24 ந் தேதி ஜெயலலிதா பிறந்தநாள். அன்று பிரமாண்ட மேடையமைத்து முழங்கப் போகிறார் ஓ.பி.எஸ். அந்த மேடைக்குதான் கமல் வரப்போகிறாராம். ஒரே மேடையில் ஓ.பன்னீர் செல்வமும் கமலும் அமர்ந்திருக்கிற அந்த காட்சி, தமிழகத்தில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகுதோ?

1 Comment
  1. எம்.ஜி.ஆர் says

    ஜெ.,இருந்தவரை பம்மிக் கொண்டிருந்த நிறைய பேர் இப்போது போராளிகளாக, புனிதர்களாக, மகான்களாக விஸ்வரூபம் எடுத்து வருகிறார்கள். குறிப்பாக கமலஹாசன் கடந்த ஒரு மாதகாலமாக மாணவர்களின் ரட்சகன் போலவும், மாணவர்களுக்கு ஆபத்பாந்தவன் போலவும் டுவிட்டர்களில் பொங்கி வழிகிறார். அதற்கு ஏற்றார் போலவே சு. சாமியும் கமலை குறி வைத்து தாக்குகிறார். தமிழ்நாடு பிஜேபியினர் அமைதியாக இருக்கிறார்கள். கமலும் சு.சாமியும் சீரியசாக சண்டை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கமலுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர்களே வேண்டாம் என்றவர்கள் கமலுக்கு ஆதரவாக சமூகவலைத் தளங்களில் போராடிக் கொண்டிருகிறார்கள். இதில் தான் உள்குத்து இருக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மண்டை காய்கிறதா நண்பர்களே..? அதிமுகவுக்கு சரியான தலைமை இல்லை. திமுகவில் சகோதரர் சண்டை. இந்த நேரத்தில் கமல் போன்ற ஒருவர் தமிழக பிஜேபிக்கு அவசியம். தூக்கு கமலை..! ஆனால் அவர் பின்னால் அணிவகுக்க மாணவர்கள், இளைஞர்கள் வேண்டும். அதற்கான முதல் கட்டம் டுவிட்டார் மூலம் புரட்சிநடிகர் ஆனார் கமல். இரண்டாம் கட்டம் சு.சுவாமி,கமல் மோதல்..இனிப் போகபோகப் பாருங்கள். பிரதமரின் திரைக்கதை புரியும் என்கிறார்கள்.
    நம்பவே முடியவில்லை. இப்படியெல்லாமா பிளான் போடுவார்கள்.
    மாணவர்களே உஷார்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
One Who With Us Will Betray-Vijay Antony Complaint.

https://youtu.be/y7tmlN94-YA

Close