அதான் கைக்கு வந்தாச்சே… இனி ‘பத்மபூஷண் கமல்’ என்றே அழைக்கலாம்!
இந்தியாவை விட்டே வெளியேறுவேன் என்று விஸ்வரூபம் சமயத்தில் கவலை ஏற்படுத்திய கமல், தனது சொல்லை அப்படியே வாபஸ் பெற்றிருக்கிறார். இந்த இனிய மாற்றம் ஏற்பட்டதற்கு காரணம், அவருக்கு கிடைத்த பத்மபூஷண் விருது.
கடந்த ஆண்டு ‘விஸ்வரூபம்’ படம் தொடர்பான சர்ச்சை எழுந்து, படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட போது பேட்டியளித்த கமலஹாசன், ‘உலக நாயகன் என்று சொல்வதால், என்னை தமிழகத்தைவிட்டு வெளியேற்றிவிட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன். தமிழகம் எனக்கு இல்லாமல் போனால் மதசார்பற்ற மாநிலத்தையோ, நாட்டையோ தேடிச் செல்வேன். என்னை எங்கு குடியமர்த்துவது என்பது என் ரசிகர்களுக்கு தெரியும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது பத்மபூஷன் விருது பெற்றபோது, சுற்றிலும் ஜாம்பவான்கள் நிற்க, தனக்கு ஏற்பட்ட உணர்வு குறித்து கருத்து தெரிவித்த கமல், ‘என்னைச் சுற்றிலும் இருந்த சிறப்புக்குரியவர்களுடன் இணைந்து நானும் ஒருவனாக இந்த விருதைப் பெற்றமைக்காக பெருமிதம் அடைந்தேன். அவர்களின் திறமை மற்றும் சாதனைகளை நினைத்து பூரிப்படைந்தேன். இந்தியனாக இருப்பதில் பெருமைக் கொண்டு, இந்த நாட்டுக்கு நான் ஆற்றவேண்டிய கடமையை எண்ணி, மீண்டும் ஒருமுறை அதற்காக சூளுரைத்தேன். எதிர்காலத்தில், கோபப்பட்டு இந்த நாட்டை விட்டு வெளியேறுவது என்று முடிவெடுப்பதில்லை என்று உறுதியாக தீர்மானித்தேன்’ என்றார் உணர்ச்சி பொங்க.
இந்த விருது அறிவிக்கப்பட்டாலும், அதை பெறும் வரை தன்னை ‘பத்மபூஷண் கமல்’ என்று அழைக்கக்கூடாது என்று தன் ரசிகர்களுக்கு கட்டளையிட்டிருந்த அவர், இனிமேல் பத்மபூஷண் கமல் என்று ரசிகர்கள் கொண்டாடும்போது தடுக்கப் போவதில்லை.
Kamal conferred Padma Bhushan, pledges commitment to his country!
Ulaganayagan Kamal Hassan was conferred Padma Bhushan by President Pranab Mukherjee at Rashtrapati Bhavan on 31st March. After receiving the honour from the President he released a press statement pledging his commitment to the country.
When the controversy surrounding the release of his film Vishwaroopam Kamal had spoken out of anger saying that he would leave the country and settle down in a state or a country where there is no religion. He had realised his emotions overtook him then when he uttered those words and expressed himself in a statement saying that he would never leave the country in anger and is proud to be an Indian.
In his statement Kamal who has become emotional rubbing shoulders with stalwarts and luminaries has said, “I looked around me proud to be among champions absolutely humbled by all the talent and achievement they stood for. I once again pledged my commitment to the country and hoped I won’t have to leave it in anger in future. I found myself to be positive. I am proud to be an Indian”, said exalted Kamal.
Kamal had earlier asked his fans not to call him Padma Bhushan Kamal. As he is now conferred the title he would not mind if he is called so hereafter.
அட மந்திகளே,
பத்மஸ்ரீ, பத்மபூஷண் என்பவை பட்டங்கள் அல்ல, விருதுகள். இந்த வேறுபாடுகள் கூடத் தெரியாமல் ஆடுகின்றன அடிமைகள் கூட்டம்.
இப்படி பெயருக்கு முன்னால் பட்டம் போட்டுக்கொண்ட நடிகர்கள் மோகன்பாபு, பிரம்மானந்தம் போன்றோரின் விருதுகள் பறிக்கப்பட்டது நினைவிருக்கிறதா?