ஆட்சியாளர்களின் முடிவுகள் மீது நம்பிக்கை இல்லை! கமல் ஆவேசம்!

கமலின் பேச்சு பல நேரங்களில் விளக்கெண்ணையில் விழுந்த வாழைப்பழம் போல படு ஜாக்கிரதையாக இருக்கும். இன்றைய சென்னை நிலவரம் பற்றி கடும் கோபத்துடன் சில கருத்துக்களை வெளிப்படுத்த துணிந்திருக்கிறார். அதே நேரத்தில் அவருக்குள்ளிருக்கும் இன்னொரு கமல், பார்த்து… கவனம் என்று கூறிவிட்டது போலும். மிக ஜாக்கிரதையாக வார்த்தைகளை கையாண்டிருக்கிறார். அவர் ஒரு ஆங்கில இணையதளத்தில் கூறிய கருத்துக்கள் அப்படியே கீழே-

“ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கே இந்த நிலைமை என்றால் பிற பகுதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. ஏழைகளுக்கும், நடுத்தர வகுப்பினருக்கும் இது ஒரு கெட்ட கனவு. பணக்காரர்கள் பிறர் படும் துன்பம் கண்டு வெட்கப்படவேண்டும் . நான் பெரிய பணக்காரன் இல்லையென்றாலும் ஒன்றும் செய்யமுடியாமல் வேடிக்கை பார்ப்பது எனக்கே வெட்கத்தை உண்டாக்கிறது.

ஒட்டுமொத்த நிர்வாகமும் குலைந்து போய்க் கிடக்கிறது, மழை நின்றாலும் சென்னை இதிலிருந்து மீண்டு வர பல மாதங்கள் ஆகலாம். மக்களின் வரிப்பணம் எங்குச் செல்கிறது எனத் தெரியவில்லை. நான் கருப்புப் பணம் வைத்திருப்பவன் அல்ல, ஒழுங்காக வரி கட்டுபவன். நான் உழைத்துச் சம்பாரித்துக் கட்டிய வரிப்பணம் உரியவர்களுக்குப் போய்ச் சேர்வதில்லை என நன்றாகத் தெரிகிறது.

எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை, தங்களைக் கடவுளாக அறிவித்துக்கொண்ட ஆட்சியாளர்களின் முடிவுகள் மீதும் நம்பிக்கை இல்லை. யார் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி, கார்ப்ரேட் திட்டங்களுக்கு ரூ.4000 கோடி செலவழிக்கிறார்களே, அதை 120 கோடி மக்களுக்குப் பிரித்துக்கொடுத்தால் அனைவரும் கோடிஸ்வர்கள்தானே.

இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் ஏற்பட்டால் உடனே எங்களைப் போன்றவர்களிடம் இருந்து பொருளாதார உதவிகளை அரசு எதிர்பார்க்கிறது, ஆனால் அதற்காகத்தான் அரசை நாம் நியமித்துள்ளோம் என்பதை மறந்துவிடுகின்றனர். அரசோடு ஒப்பிடுகையில் நான் குறைவாகவே சம்பாரித்தாலும், கொடுக்க வேண்டியது என் கடமை என்பதும் எனக்குத் தெரியும். கண்டிப்பாக நான் நிதியளிப்பேன் ஆனால் அது மக்களின் ரத்தத்தை உறிஞ்சிய பணக்காரனின் பணம் அல்ல, மக்களை உண்மையாகவே நேசிக்கும் ஒருவனின் பணம். அரசு எல்லோரையும் ஒன்றாக நடத்தினால் ஏழை,பணக்காரன் பேதம் ஒழிந்து போகும்”

கமலின் இந்த ஆவேச முழக்கம் நியாயமானதுதான்.

Read previous post:
இடுப்பளவு தண்ணீர் இறங்கி நடந்த குஷ்பு!

குஷ்புவை அரசியல் இயக்குகிறதா, அல்லது அவரது இளகிய மனசு இயக்குகிறதா? அது முக்கியமில்லை. கடந்த வாரம் அடித்த மழையாக இருந்தாலும் சரி. நேற்று இன்று பெய்து வரும்...

Close