மாற்றம் முன்னேற்றம் கமல்ஹாசன்! கிளம்பிருச்சு தொண்டர் படை!
பின்னால் பிஜேபி இருக்கிறது. திமுக இருக்கிறது. குரங்கு இருக்கிறது. கோட்டான் இருக்கிறது…. இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். கமல்ஹாசனின் சமீபகால அரசியல் பேச்சுக்கு, எழுந்து நின்று கைதட்டிவிட வேண்டியதுதான்!
‘கருவாடு ஸ்மெல்லை விட கடுமையான துர்நாற்றத்திற்கு ஆளாகிவிட்டதே நாடு’ என்கிற கவலையில்லாத மனிதர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், டிடிவி கோஷ்டியை சேர்ந்தவர்களாக மட்டும்தான் இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் ஓரணியில். அது? ‘இந்த கொடுமை வேண்டாம்டா சாமீய்’ என்கிற அணி. இந்த அணிக்குதான் கமல் தலைமை தாங்குவார் போலிருக்கிறது எதிர்காலத்தில்.
கமல் பேச்சை கூர்ந்து கவனிப்பவர்கள், அவர் முழுநேர அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்கிற உண்மையை சட்டென்று புரிந்து கொள்ள முடியும். அறிவாளி, பன்மொழி புலவர், தமிழ்நாடு கேரளா போல படித்தவர்கள் நிறைந்த நாடாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர், சுற்று சூழலை ஆர்வத்தோடு சரி செய்ய நினைப்பவர், நதிநீர் இணைப்பை நோக்கமாக கொண்டவர், இப்படி பல ஆசைகளும் தகுதியும் கொண்ட கமல், ஏன் வரக்கூடாது என்கிற எண்ணமுள்ளவர்கள் அவர் பின்னால் சர்வசாதாரணமாக நடக்கக் கிளம்பிவிடுவார்கள்.
ஆமாம்… கமல் கோவையில் பேசியதென்ன?
ஈச்சனாரியில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கமல்ஹாசன் பேசிய அத்தனையும் கைதட்டலுக்காக பேசியதில்லை.
“இதை திருமண விழாவாக பார்க்கவில்லை. இதனை ஆரம்ப விழாவாக கருதுகிறேன். திருடர்களை அனுமதித்தோம் ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். அரசியலை இப்படியே விட்டு வைக்கக்கூடாது. அரசியல் சூழலை இப்படியே விட்டுவைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை”.
“இந்த சமூகத்தின் மீதான கோபம் எனக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தலைமையேற்க எனக்கு தைரியம் வந்துவிட்டதா என்று கேள்வி கேட்கிறார்கள். உங்களுக்கு தைரியம் வந்துவிட்டதா? (ரசிகர்களிடம்) நாம் நமது வேலையை செய்வோம். தேவைப்பட்டால் கோட்டையை நோக்கி புறப்படுவோம். தொடர்ந்து போராடுங்கள். தொடர்ந்து கேள்வி கேளுங்கள். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள். தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள தொடர்ந்து போராடுங்கள். சொத்து சேர்த்தால் மட்டும் போதாது; அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டும்”.
கோட்டையை நோக்கி புறப்படுவோம் என்கிற கமல் பேச்சுக்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீயாக்ஷன். நேற்றே பல இடங்களில் பட்டாசு வெடிக்க ஆரம்பித்திருந்தார்கள். “எங்க தலைவனை கோட்டையில் உட்கார வைக்காம ஓய மாட்டோம்” என்ற கோஷம் வேறு.
ந்தா… ஆரம்பிச்சுட்டாங்கள்ல?
Kamal is a Foolish actor